காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெறும் என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பதிவில் தகவல் வழங்கியுள்ள நகர்மன்றத் தலைவர், இக்கூட்டத்தில் 92 பொருட்கள் இடம்பெறவுள்ளதாகவும்,
2015-16 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சாலை, மழை நீர் வடிகால், இரண்டாம் குடிநீர் திட்டத்தில் விடுப்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்க நிதி ஒதுக்குதல், கல்வி, மருத்துவம், சமுதாய கூடங்கள், நகராட்சி வரவுக்கு புதிய கட்டிடங்கள்/கடைகள், உயர் நிலை குடிநீர் தொட்டிகளை மேம்படுத்தல், அரசு/நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மயான ஸ்தலங்களை புனரமைத்தல், CCTV கேமரா பொறுத்த நிதி ஒதுக்குதல், BIO - METRIC ATTENDANCE, நகராட்சி வாகனங்களில் GPS கருவி பொருத்துதல் வகைக்கு நிதி ஒதுக்குதல் உட்பட பல பணிகளுக்கு நிதி ஒதுக்குவது,
நகர்மன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட புதிய சாலைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நகர்மன்றத் தலைவரின் முகநூல் பதிவு வருமாறு:
செப்டம்பர் 11 அன்று நகராட்சியில் நடந்த சி கஸ்டம்ஸ் சாலை குறித்த கூட்டத்தினை தொடர்ந்து, செப்டம்பர் 22 அன்று காலை 10:30 மணிக்கு செப்டம்பர் மாத சாதாரண கூட்டத்தினை நடத்திட - அஜெண்டாவை இறுதி செய்து, காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு செப்டம்பர் 14 அன்று ஈமெயில் மூலம் அனுப்பினேன். அந்த ஈமெயிலில் - அஜெண்டாவினை பிரிண்ட் எடுத்து, எனது கையெழுத்து பெற்று, உறுப்பினர்களுக்கு உடனடியாக விநியோகம் செய்யும்படியும் ஆணையரிடம் தெரிவித்துள்ளேன். ஆணையருக்கு நினைவுகூறி மீண்டும் 16-9-2015 அன்று கடிதம் அனுப்பியுள்ளேன்.
ஆணையருக்கு நகர்மன்றத் தலைவர் அனுப்பிய 14-9-2015 தேதிய கடிதம்
ஆணையருக்கு நகர்மன்றத் தலைவர் அனுப்பிய 16-9-2015 தேதிய கடிதம்
நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், செப்டம்பர் மாதம் 22ம் தேதி சாதாரண கூட்டப் பொருள்களை (அஜெண்டா) பதிவு தபால் மூலம் - செப்டம்பர் 16 அன்று அனுப்பி, இது குறித்த தகவலையும் SMS மூலம் தெரிவித்துள்ளேன்.
இந்த அஜெண்டாவில் 92 பொருட்கள் இடம்பெற்றுள்ளன: அதில் -
(1) 2015-16 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சாலை, மழை நீர் வடிகால், இரண்டாம் குடிநீர் திட்டத்தில் விடுப்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்க நிதி ஒதுக்குதல், கல்வி, மருத்துவம், சமுதாய கூடங்கள், நகராட்சி வரவுக்கு புதிய கட்டிடங்கள்/கடைகள், உயர் நிலை குடிநீர் தொட்டிகளை மேம்படுத்தல், அரசு/நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மயான ஸ்தலங்களை புனரமைத்தல், CCTV கேமரா பொறுத்த நிதி ஒதுக்குதல், BIO - METRIC ATTENDANCE, நகராட்சி வாகனங்களில் GPS கருவி பொருத்துதல் வகைக்கு நிதி ஒதுக்குதல் உட்பட பல பணிகளுக்கு நிதி ஒதுக்குவது குறித்து
(2) நகர்மன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட புதிய சாலைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள்
போன்றவை அடங்கும்.
இதில் - பிப்ரவரி, மார்ச், மே, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய பல தீர்மானங்களும் உள்ளது.
நகர்மன்ற உறுப்பினர்கள் - செப்டம்பர் 22 அன்று அழைக்கப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்துக்கொண்டு, நகரின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தேவையான இத்தீர்மானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
செப்டம்பர் மாத சாதாரண கூட்ட பொருட்கள்
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik |