கத்தர் காயல் நல மன்றத்தின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் செயலாளர் முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் கத்தர் காயல் நல மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 24.09.2015 அன்று புனித ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, வழமை போல நம் மன்றத்தின் சார்பில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருநாளன்று 15.30 மணியளவில், Fraser Suites Doha Park, Corniche Road, Doha Qatar எனும் முகவரியில் நடைபெறவுள்ள இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், மன்ற அங்கத்தினர் உள்ளிட்ட காயலர் யாவரும் - இச்செய்தியையே அழைப்பாகக் கருதி தவறாமல் கலந்துகொள்ளுமாறும், உங்களுக்கு அறிமுகமான அனைத்து காயலருக்கும் இத்தகவலைத் தெரிவித்து, அவர்களையும் கலந்துகொள்ளச் செய்யுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
இப்பெருநாள் போல் எந்நாளும் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு, சகோதரர் முஹம்மத் லெப்பை (5570 9972), சகோதரர் முஹம்மத் முஹ்யித்தீன் (5525 9606) சகோதரர் ஹுஸைன் ஹல்லாஜ் (3349 2265) ஆகியோரைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |