வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள நலிவடைந்த 30 குடும்பங்களுக்கு உணவுப் பொருளுதவி வழங்கிடுவதென, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் - ஜக்வா அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் தலைவர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும்...
எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் தலைமையில், துணைத் தலைவர் ஹாஜி எஸ்.எம்.தாஹிர் இல்லத்தில், 13.09.2015 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. ஹாஜி எஸ்.எச்.ஜாஃபர் சாதிக் சாளை எம்.ஏ.பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ கிராஅத் ஓதினார்.
தலைமையுரைக்குப் பின் உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. பின்னர் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு ஊரில் நலிவடைந்த 30 குடுமபங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது...
2. நமது KMT மற்றும் ஷிஃபா ஹெல்த் வெல்பேர் அசோசியனுக்கு ஸதக்கா நிதியிலிருந்து தலா 5000/= (ஐயாயிரம்) வீதம் வழங்குவது...
3. நமதூரில் நமது மன்றத்தின் சார்பில் ஊரின் பல பாகங்களில் நிறுவப்பட்டுள்ள பேருந்து கால அட்டவனை போன்று, ஜாஃபர் சாதிக் அப்பா தர்ஹா பேருந்து நிறுத்தத்திலும் ஒரு அட்டவணைப் பலகையை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்துவது...
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்றச் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ துஆ ஓத, ஸலாவத்துடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜக்வாவின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |