ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
இது தவிர, தனி நபர்களாக பெரும்பாலோர் ஆடுகளையும், சிலர் மாடுகளையும் கொள்முதல் செய்து, தமதில்லங்களிலேயே குர்பானி கொடுக்கும் வழமையும் உள்ளது. அதற்காக, ஹஜ் பெருநாளையொட்டி காயல்பட்டினத்தில் செம்மறிக் கிடாக்கள் குவிக்கப்பட்டிருக்கும்.
நடப்பாண்டு உள்ஹிய்யாவுக்காக காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்க முனை, கடைப்பள்ளிக்கு எதிரில் என பல இடங்களில் செம்மறிக் கிடாக்கள் குவிக்கப்பட்டுள்ளன. ரூபாய் 8 ஆயிரத்திலிருந்து துவங்கி, 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் செய்தோர், தமது கிடாக்களின் கொம்புகளில் விதவிதமான வண்ணங்களில் கயிறுகளை மாட்டி வைப்பதன் மூலம், ஏற்கனவே விற்கப்பட்ட கிடாக்கள் அடையாளம் காணப்படுகின்றன. துல்ஹஜ் 10 (இன்று) துவங்கி, துல்ஹஜ் 13 (செப்டம்பர் 27) வரை உள்ஹிய்யா கொடுக்கப்படவுள்ளது.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ஹஜ் பெருநாளையொட்டி உள்ஹிய்யாவுக்காக கால்நடைகள் குவிக்கப்பட்டமை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|