‘தூய்மை காயல் – CLEAN KAYAL’ குழுமத்தின் சார்பில், 3 துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு அன்றாடம் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஹஜ் பெருநாள் மாலையில் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக, கடற்கரையில் ஆங்காங்கே வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியைச் செய்திட, அதன் கண்காணிப்புக் குழு உறுப்பினரும், நகர்மன்ற 05ஆவது வார்டு உறுப்பினருமான எம்.ஜஹாங்கீரிடம், குழுமத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து, அவரது முயற்சியில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளரின் மேற்பார்வையில், நகராட்சியின் சார்பில் கடற்கரையில் முட்புதர்களை அகற்றல் உள்ளிட்ட துப்புரவுப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
பெருநாளன்றும், அதற்கடுத்த நாளும் (இன்றும், நாளையும்) மாலையில் கடற்கரையில் ஆண்களுக்குத் தனியாகவும், பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்குத் தனியாகவும் பாதை பிரிக்கப்பட்டுள்ளது. இதை அறிவிக்கும் வகையில், கடற்கரை நுழைவாயிலில் பின்வருமாறு திசை காட்டும் பலகையும் நிறுவப்பட்டுள்ளது:-
படங்களில் உதவி:
M.ஜஹாங்கீர்
கள உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தூய்மை காயல் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |