சாகுபுரம், டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் காயல்பட்டிணத்தில் பெண்கள் வழிபடும் தைக்காவிற்கு ரூபாய் இரண்டு இலட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
காயல்பட்டிணம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு, பிலால்நகர், நயினார் தெருவில் கதிஜா நாயகி பெண்கள் தைக்கா மக்தபத்துல் முஹம்மதியா பள்ளிவாசல் கட்டப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது. இந்த தைக்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் டி.சி.டபிள்யூ நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் சுமார் இரண்டு லட்சம் செலவில் தளம் அமைத்தல் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 3வது வார்டு கவுன்சிலர் சாரா உம்மாள் தலைமை வகித்தார். தைக்கா பொறுப்பாளர்கள் செய்து ஹலீமா மற்றும் அகமது அலி பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.சி.டபிள்யூ நிறுவன செயல் உதவி தலைவர் மே.சி.மேகநாதன், டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் கட்டி கொடுக்கப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் 2வது வார்டு கவுன்சிலர் முகமது செய்யது பாத்திமா, பிலால் பள்ளி வாசல் நிர்வாகிகள் முஸ்தபா, வி.கே.எஸ். சித்திக், சேட்டப்பா ஹரீம் கோமான் ஜமாத்தைச் சேர்ந்த ரபீக் டி.சி.டபிள்யூ நிறுவன துணை மேலாளர் (மக்கள் தொடர்பு) சித்திரைவேல், மக்கள் தொடர்பு அதிகாரி அருணா மற்றும் அப்பகுதி பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்துல்லா செய்திருந்தார்.
தகவல்:
www.tutyonline.com
|