காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 03ஆவது வார்டு, பிலால்நகர், நெய்னார் தெருவிலுள்ள கதிஜா நாயகி பெண்கள் தைக்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் டி.சி.டபிள்யு. நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், இதையடுத்து டி.சி.டபிள்யு. நிறுவனம் சார்பில் சுமார் இரண்டு லட்சம் செலவில் தளம் அமைத்தல் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
திறப்பு விழா நிகழ்ச்சியில், காயல்பட்டினம் பிலால் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவறான செய்தி என்றும், சில புல்லுருவிகள் செய்த சதிச்செயல் என்றும் அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளியின் அறிக்கை வருமாறு:-
தகவல்:
ஸெய்யிதினா பிலால் பள்ளி நிர்வாகம் சார்பாக...
பேராசிரியர் K.M.S.சதக்கு தம்பி
(தலைவர் - ஸெய்யிதினா பிலால் பள்ளி)
பிலால் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |