காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 03ஆவது வார்டு, பிலால்நகர், நெய்னார் தெருவிலுள்ள கதிஜா நாயகி பெண்கள் தைக்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் டி.சி.டபிள்யு. நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், இதையடுத்து டி.சி.டபிள்யு. நிறுவனம் சார்பில் சுமார் இரண்டு லட்சம் செலவில் தளம் அமைத்தல் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
இதுகுறித்து, தைக்கா நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
1. தைக்கா நமக்கு சொந்தமா ? இல்லையா?... posted byN.S.E.மஹ்மூது ( காயல்பட்டணம்)[29 September 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 41908
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பானவர்களே!
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது – தைக்கா நிர்வாகம் கொடுத்திருக்கும் விளக்கம் சரியானதே! – தைக்கா நிர்வாகத்தினர் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெளிவாகிறது.
-----------------------------
இந்த நிகழ்ச்சிக்கு முன்போ, நிகழ்ச்சி நடைபெற்றபோதோ – நன்கொடையாளர் யார் என்பதை தெரிவிக்கப்படவே இல்லை என்றும், 3வது வார்டு உறுப்பினரிடம் பல தருணங்களில் தனிப்பட்ட முறையில் கேட்டபோதுகூட
”ஒர் ஆள்” என்றேதான் சொல்லி இருக்கிறார் – உண்மையை சொல்லவில்லை என்று தைக்கா நிர்வாகம் தெரிவிக்கிறது.
--------------------------------
தைக்கா நிர்வாகம் ஒருவரின் சொல்லை நம்பி ஏமாந்திருக்கிறது – இனிமேலாவது உசாராக இருங்கள் – பொது விசயத்தில் யாரையும் , எவரையும் , எதற்காகவும் நம்ப வேண்டாம்.
தயவு செய்து தைக்காவும் அதைச் சார்ந்த நிலங்களும் தைக்கா சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் இருக்கிறதா? அல்லது வேறு யார் பெயருக்கும் மாற்றப்பட்டிருக்கிறதா? என்பதை மட்டும் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
---------------------------------
என்னடா? அப்படியெல்லாமா! நடக்கும் என்று என்ன வேண்டாம்!! இதை மறைத்தவர்கள் – அதை மறைக்கவா மாட்டார்கள்?
மேற்கூரையும், தரை தளமும் அமைக்க 78692 ரூபாய் 50 பைசாதானே ஆச்சு எப்படி 2 இலட்சம் வந்தது? என்று சொல்கிறார்கள்! என அவர்கள் செலவு செய்த கணக்கை கேட்க சொல்லவில்லை.
தைக்கா நமக்கு சொந்தமா ? இல்லையா? என்பதைத்தான் உறுதிப்படுத்திப்பார்க்க சொல்கிறேன்.
நகராட்சியில் பிளான் அப்ரூவல் வாங்கனும், மின்சாரம் தனியாக எடுக்கனும் அதற்காக தைக்காவுக்குள்ள பத்திரம் தாங்க என்று வாங்கி – கொடுக்க வேண்டியதை கொடுத்து , மாற்ற வேண்டியதை (பெயரை) மாற்றிவிடுவார்களே!
ஆகவே! தைக்காவும் அதைச்சார்ந்த நிலமும் என்ன நிலையில் உள்ளது என்பதை துரிதமாக , முறையான நடவடிக்கையின் மூலம் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
--------------------------------
தைக்கா நிர்வாகத்திற்கு ஓர் வேண்டுகோள்!
தைக்கா சம்பந்தமான அனைத்து பொது நிகழ்வுகளும் சுதந்திரமாக தைக்காவின் தனிப்பட்ட நிர்வாகிகளின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் அதில் எந்த மாற்றமோ! மாற்றுக்கருத்தோ! இல்லை.
ஆனால் கட்டிடப்பணிகள், கொள்கை சம்பந்தமான விசயங்கள் என்று வரும்போது அவசியம் பெரிய பள்ளி நிர்வாகத்தில் முறையாக அனுமதிப் பெற்று அதை செயல்ப்படுத்த வேண்டும்.
அப்படி முறையான அனுமதி பெற்றிருந்தால் இவ்வளவு சிக்கல்கள் வந்திருக்காது – என்று தோன்றுகிறது.
2. பாராட்டும் வருத்தமும் posted byM.S.Sayyid Mohammed (Bangkok)[29 September 2015] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 41910
வீரியாகமாகவும் விறுவிறுப்பாகவும் சென்ற விளக்கவுரை இறுதியில் சுருதி குறைந்து வார்டு உறுப்பினரைப் பாராட்டியும், கண்டிக்காமல் வருத்தத்துடன் முடிவுரை எழுதிருப்பது பாம்பு சாகாமல் இருக்கவேண்டி தும்புக்கட்டையால் தூசிதட்டிவிட்டு நைய்யப் புடைத்து விட்டோம் என்று சொல்கிற மாதிரி உள்ளது.
அவரைக் கண்டிப்பதில் என்ன கரிசனம் வேண்டிக் கிடக்கிறது. உங்கள் முஹல்லாவிலும் தைக்காவிலும் சில நற்பணி செய்துள்ளார் என்ற நன்றி விசுவாசத்தில் அவரைத் தட்டிக்கேட்காமல் ஆத்திரப்பட்டு கண்டிக்காத நீங்கள் வருத்தப்படுவதை (தைக்கா நிர்வாகத்தை) ரோஷமுள்ள நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
3. Re:... posted byFuad (Kayalpatnam)[29 September 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41913
அஸ்ஸலாமு அலைக்கும். டி. சி . டபுள்யு ஆலையால் நம்மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது நகரமன்ற 3-வது உறுப்பினருக்கு தெரியாதா? யாரையோ திருப்தி படுத்துவதற்காக ஏன் இந்த தேவையில்லாத வேலை? அதற்காக ஒரு தைக்கா நிர்வாகத்தையா பலி கொடுக்கவேண்டும்?
மரியாதைக்குரிய உறுப்பினர் தன்னிலை விளக்கம் தருவாரா?
தைக்கா நிர்வாகம் உறுப்பினரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்திருப்பதற்கு பதில் அவரை ஜமாஅதார்கள் அழைத்து கண்டனம் தெரிவித்திருக்கலாம். இனிவரும் தேர்தலில் இத்தகைய உறுப்பினர்களை தேர்வு செய்யாமலிருப்பது நல்லது.
4. கடைந்தெடுத்த பச்சை அயோக்கியத்தனம்...! posted byM.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்)[29 September 2015] IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 41915
ஜமாஅத்தினரை குறை கூறவில்லை! மாறாக கடைந்தெடுத்த பச்சை அயோக்கியத்தனத்தால் ஜமாஅத்தினரை ஏமாற்றி அவர்களை கொச்சைப்படுத்திய ஜோடிகளைத்தான் சாடுகின்றோம். இவர்களை இனங்கண்டு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
ஒட்டு மொத்த ஊரும் சேர்ந்து நச்சு ஆலைக்கெதிராக குரல் கொடுக்கும் போது இந்த ஈனப்பிறவிகளின் இழி செயலால் அநேக மக்கள் கொந்தளித்துளார்கள் என்பது உண்மை! கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்குத்தான் என்பது உறுதியாகிவிட்டது. இன்னும் எத்தனை நாளைக்குதான் ஊரை அடித்து உலையில் போடுவார்கள் என்று பார்ப்போம். மேற்படி ஆலையிடம் இருந்து பெறப்பட்ட தொகையை நம்மவரிடமிருந்து வசூல் செய்து நாசக்கார ஆலை நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுப்பதே சரி! ஜமாஅத் நிர்வாகிகள் இதற்கு முன் வர வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்கள் கருத்து.
-ஹிஜாஸ் மைந்தன்.
5. கருப்பு ஆடுகளை அப்புறப்படுத்துங்கள் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[30 September 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41918
நமதூருக்கு எதிர்ப்பாகவோ,அல்லது நமதூரை மதிக்காமல், கிடக்கிறார்கள் இவர்கள்,இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்புடனோ எலும்புத்துண்டுக்காக அலையும் சில எச்சிலை நாய்கள் நமதூரில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இவர்கள் நமதூருக்கும் நம் மக்களுக்கும் எதிராக என்ன வேண்டுமானாலும் செய்ய சிறிதும் தயங்காத துரோகிகள்!
பணத்திற்காக DCW யிடம் மட்டுமென்ன, மாது,மது விற்பனை வியாபர உரிமையாளர்களிடம் கூட பச்சோந்தித்தனமாக பல்ளிளித்து, பணத்திற்காக அவர்கள் பாதம் கழிவியேனும் ஈனத்தனமாக தங்கள் வாழ்க்கையை நடத்துவதோடு பல நல்லவர்களையும் அவர்களின் சூழ்ச்சி வலையில் விழச்செய்யும் சில பேடிகளின் சித்து விளையாட்டுகளில் ஒன்றுதான் இந்த தைக்கா உதவி நிகழ்ச்சியாகும்!
தைக்கா நிர்வாகமும் அந்த ஜமாத்தும் இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்க வில்லை என்றும் அந்த நிகழ்விற்க்காக மனம் வருந்துவதாகவும் அறிக்கை வெளியிட்டிருப்பது சற்று ஆறுதலை தந்தாலும்,இந்த கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து ஊருக்கு தெரியப்படுத்துவது அவர்கள் கடமையாகும். அந்த புகைப்படத்திலுள்ள அவர்கள் ஜமாத்து ஆட்களை விசாரணை செய்வதும் அவர்கள் உரிமையாகும்!
DCW யிடம் பணமே பெறாவிட்டாலும் அந்த ஆலையின் உதவித்தலைவர் அந்த நிகழ்ச்சிக்கு வரக்காரணம் என்ன?சாதாரணமாகக்கூட அவரை கூப்பிடலாமா?அவர்களின் ஆலையின் நிகழ்ச்சிகளுக்கு நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டதற்கு, நம் கண்டனத்தால் கடித்து குதறும் நாம், அந்த ஆலையின் தலைவரையே நம் புனித குரான் ஓதும் ஒரு புண்ணிய இடமாகிய தைக்காவிற்கு அழைத்திருக்கிறோம் என்றால் நமதூரை சுற்றியுள்ள அனைத்து பகுதி மக்களும் நம்மை பார்த்து ஏளனம் செய்ய மாட்டார்களா? இவர்களை எவுவ்ளவு அடித்தாலும் தாங்கும் ஜென்மங்களடா என்று இழிசொல் மழையை பொழிய மாட்டார்களா?
ஆகவே,அன்பு காயல் நெஞ்சங்களே, ஊருக்கு துரோகம் விளையும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு காரணமாக இருக்கும் கயமை குணமுள்ள கருப்பு ஆடுகளின் முகத்திரையை கிழித்தெறிந்து ஊருக்கு அவர்களை அடையாளம் காட்டுவது ஒவ்வொரு உண்மையான காயலர்களின் கடமையாகும்!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
6. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[30 September 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41920
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்னை கதீஜா நாயகி பெண்கள் தைக்கா நிர்வாகத்தின் தன்னிலை விளக்கம் ...சுத்தமாகவே யாராலும் கொஞ்சம் கூட ஏற்று கொள்ளத்தக்கது கிடையாது ........நன்கொடையை இவர்கள் பெறுவார்களாம் ...ஆனால் தந்தவர் யார் என்பதை பத்திரிக்கை வாயிலாக தான் ...நிர்வாகத்தினர்கள் அறிந்து கொண்டதாக சொல்கிறார்கள் ....நிகழ்ச்சி சமையத்தில் கூடவா இவர்களுக்கு தெரிய வில்லை ....விளக்கம் . ஏற்று கொள்ளத்தக்கது அல்ல .....
இன்னும் கூட அந்த நகர் மன்ற உறுப்பினர் அவர்களை அழைத்து கண்டித்ததாகவே தெரியவும் இல்லை ......
ஆமா இந்த உறுப்பினர் அவர்கள் ஏன் ?? நன்கொடை நபரை கடைசி நேரம் வரைக்கும் நிர்வாகத்திடம் மறைக்கணும் ?? ஒன்றுமே புரிய வில்லை ....எங்கோ நன்றாகவே இடிக்கிறது .........
நமது ஊர் பொது மக்கள் >> DCW << தொழிற்சாலை விசையத்தில் பலதரப்பு பட்ட நோய்களால் போராடி கொண்டு இருக்கும் இந்த வேலையில் ...இந்த பணத்தை கொண்டு தான் இவர்கள் செயலாற்ற வேணுமா ?? என்ன .....
ஊர் பொது மக்களுக்காக பல தரப்பு முனைகளில் இருந்தும் நல்ல உள்ளம் படைத்த .நம் மக்கள் போராடிக்கொண்டு இருப்பது நன்கு தெரிந்த ..ஒரு நகர் மன்ற உறுப்பினர்கள் செய கூடிய செயலா ?? இது ....
நம் ஊர் நகர் மன்றத்தில் ...DCW ...தொழிற்சாலை பற்றிய பிரச்சனைகள் வந்தால் ....இந்த உறுப்பினர்கள் ஏன் '' மௌனம் '' சாதிக்கிறார்கள் என்பது நம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் இப்போதான் நன்றாகவே புரிகிறது .......
பணத்துக்காக இவர்கள் எதையும் செய்வார்களா ?? ஊர் பொது மக்களின் கஷ்டத்திலும் & உயிரிலும் இவர்களுக்கு அக்கறை கிடையாதா என்ன ?? பணம் தான் இவர்களுக்கு முக்கியமா ??
இந்த உறுப்பினர்களை நாம் குறை சொல்லவே முடியாது ....தேர்வு செய்த நம் மக்களை தான் நாம் சொல்ல வேணும் ...அல்லாஹ் போது மாணவன் ......
சட்ட சபையில் கூட நமக்காக நம் அருமை சகோதரர் அவர்கள் உரை யாற்றி உள்ளார்கள் .....இப்படி எல்லாம் நமது ஊரின் நலனில் மற்றவர்களுக்கு முழு அக்கறை இருக்கும் போது இவர்களுக்கு மற்றும் என்னவாம் ......
ஓன்று மற்றும் பொதுவாக தெளிவாகவே தெரிவது .....நாசமா போன >> DCW << காரர்கள் அவர்களின் பணத்தை வைத்து நமது ஊரில் உள்ள முக்கியமான பகுதிகளின் சூழ் நிலைமைகளை அறிந்து ....ஒரு சில குள்ள நரி கூட்டத்தை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்களை வைத்து ...அவர்களின் காயை நகர்த்தி ...வெற்றியும் காண்கிறார்கள் .......
நாம் அறிந்த வரையில் நமது ஊரின் ...ஒரு சில பள்ளி கூடத்துக்கும் >> இந்த கேடுகெட்ட DCW <<< பணம் போய் உள்ளதாகவும் வாசகம் ....
DCW காரர்கள் தங்களின் பணத்தை வைத்து ...நம் ஊர் மக்களை விலைக்கு வாங்கியதை தான் நம்மால் பொருத்து கொள்ள முடிய வில்லை ........
இவர்கள் பணம் சம்பாதிக்க ...நம் மக்களின் உயிர் போகனுமா ??
தரம் கேட்ட இப்படி பட்ட ஆள்கள் நமது ஊரில் இருப்பதால் தான் நமது போராட்டத்தில் முழுமையான வெற்றி கிட்ட வில்லை ......
8. விரட்டவேண்டும் posted byshahul hameed sak (malaysia)[30 September 2015] IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 41929
நம்ப முடியவில்லை, 'அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு' வாசகம் உள்ளது. அதனால் எதுவும் சொல்வதற்கில்லை பணத்திற்காக மக்களின் மானத்தோடும், உயிரோடும் விளையாடும் அயோக்யர்களை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்பதை தவிர!
9. He will not support next time posted bysyed umar (bangalore)[30 September 2015] IP: 49.*.*.* India | Comment Reference Number: 41930
If he knowing about donation from dcw means next time how he LL support. He thinking I blame all the mla'S. & ALL MLA thinking his peoples in wrongways only
10. தகாத வார்த்தைகள், வரம்பு மீறல்கள் தவிர்க்கப்பட வேண்டும் posted byMuhammad Abubacker (Muscat )[01 October 2015] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 41931
நடந்தது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக ஒருமையில் மற்றும் ஜோடி என்று சுட்டிக் காட்டி கருத்துக்கள் பதிவிடுவதும், அதை அட்மின் அனுமதிப்பதும் நாகரீகம் அல்ல.
இன்னமும் நமது மக்கள் விளையாடுவதற்காக
DCW சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்
11. Re:... posted byM.I.மூஸா நெய்னா (காயல்பட்டணம்)[01 October 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41932
சகோதரர் Mohamed Aboobacker கருத்தில் நான் உடன்படுகிறேன். சகோதரர் கூறியது போல் நடந்ததது தவறு தான். அதை யாரும் சரி காணவில்லை. அதன்படி பலதரபட்டவர்களிடம் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யபட்டுள்ளது. ஜமாஅத் சார்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேலும் ஒரு கருத்தாளர் தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதை எவ்வகையிலும் எற்று கொள்ள முடியாது.
கருத்து சொற்றொடரில் கண்ணியம் தேவை. ஒரு பொதுவான விசயத்தில் கருத்தை சொல்லும் போது கண்ணியக்குறைவான சொற்றொடரை உபயோகிக்கும் நபர் எப்படி கண்ணியவனாக இருக்க முடியும்.
நம்மில் பெரும்பாலோர் இன்று வரை எதோ ஒரு வகையில் DCW உடன் தொடர்பில் உள்ளவர்கள் தான். School, Play போன்றவற்றில் இன்றும் தொடர்பில் இருக்கிறோம். அதை நம்மால் இன்று வரை நிறுத்த முடிந்ததா? .
DCW சம்பந்தமான போராட்டங்களில் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டோமா!!!!. ஆக மொத்தத்தில் நடந்தது தவறு தான் என்பதில் இரு வேறு கருத்தில்லை. அதே சமயம் நமது கண்டனத்தை தெரிவிக்கும் போது வார்த்தை கண்ணியம் தேவை.
குறிப்பு : அட்மின் அவர்களுக்கு, எனது இந்த ஆதங்கத்தை தயவு செய்து எவ்வித வெட்டலும் இன்றி வெளியிடும் படி கேட்டு கொள்கிறேன்
நம் மண்ணில் விஷத்தை விதைத்து நம் மக்களையே காவு வாங்கி மண்ணோடு மண்ணாகிப் போனவர்கள் ஒன்றல்ல...இரண்டல்ல..!
கொடிய கான்சர் நோய்க்கு ஆளாகி மாண்டவர் குடும்பத்தாரிடம் போய் கேளுங்கள். அவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலியும் , வருத்தமும்...!
DCW ஊர் நச்சாலை...! கொல்லி நோயை பரப்பி வரும் ஆபத்தான ஆலை...! அதனை அடிவேரோடு பிடுங்கி எறிய ஒட்டு மொத்த ஊர் மக்களும் ஒத்துழைத்து தொடர் போராட்டம் நடத்தி வரும் வேளையில் நமதூர் தைக்காவுக்குத் தேவையான நிதியை குள்ள நரித் தனமாக கிடைக்கு இரண்டாடு கேட்கும் வகையில் உள்ளே புகுத்திய கயவர்களின் கயமைத் தனத்தை ஒருமையில் இல்லை, ஒட்டு மொத்த பன்மையில் சாடினாலும் தவறில்லை...!
கடைசி வரை பணஉதவி யாரிடமிருந்து பெறப்படுகிறது என்பதை மறைத்து வைத்து கபட நாடகமாடிய ஜோடிகளை விமர்சிப்பது நான் எனது மண்ணுக்கு செய்யும் கடமை! இதில் நளினமும், நயமும் பேணப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை...!
ஊரையே உலை வைத்து வயிறு வளர்க்கும் கேவலமான பிறவி நானில்லை...! கோபம் வரத்தான் செய்யும்...! பொறுத்தருள்க...!
13. ஆதங்கமும்,ஆத்திரமும் அத்து மீறுகிறது.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[01 October 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41937
தம்பி முஹம்மது ரபீக்கின் உணர்வோடு ஒன்றென கலக்கிறேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களின் வயிறு பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது.அதை அணைக்க எந்த சக்தியாலும் முடியவில்லை
எவ்வளவு இழப்பு, எவளவு கொடுமை, கொடூரம்,
இவ்வளவு இழப்பிறகும் காரணமாக இருபவர்களுக்கு அடிவருடும் அயோக்கியர்களை சீண்டக்கூடாதாம், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கணுமாம். அவன் இரண்டு லட்சம் மட்டும்தான் வாங்கியதாக வரும் செய்திகூட எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஏப்பம் விட்டதில் மிச்சம் மீதிதான் இந்த இரண்டு எச்சம் என்று நினைக்கின்றேன் கணக்கை யார் பார்த்தா.
இக்கொடிய நோயினால் எத்தனையோ உயிர்களையும், பொருட்களையும் இழந்து தவித்து துடித்துகொண்டிருக்கும் எங்களுரவு குடும்பம் முதல் எத்தனையோ குடும்பத்தார்களின் இதயத்திலிருந்து வெளிவரும் வேதனை பெருமூச்சின் ஓசை இந்த மனித மிருகங்களுக்கு கேட்கவா போகிறது.
நான்வரும் நாளில்கூட என் வீட்டிற்கு சற்று தூரத்தில் ஒரு இளம் வயது காளையை இந்த கொடியநோய் வாரிக்கொண்டு போய்விட்டது அந்த துக்கமிகு சோகம் என் நெஞ்சில் சூழ அன்று பயணம் புறப்பட்டேன்!.
இதுபோல் எத்தனையோ குடும்பத்தில் இக்கொடிய நோயினால் இப்பவோ பொரவோ வென்று இழுத்துக் கொண்டிருப்பது இந்த இதையமற்றவர் களுக்கு தெரியுமா?
அடப்பாவிகளே உங்கள் இதயம் என்ன இரும்பால் செய்ததா?எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.எங்கே போய்விடுவார்கள் அந்த படைத்தொனின் கை பிடி இறுக்கத்தில் இருந்து!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
14. Re:... posted byM.I.மூஸா நெய்னா (காயல்பட்டணம்.)[02 October 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 41942
கண்ணியத்திற்குரிய கருத்தாளர்களே !!!. தங்களின் ஆதங்கம் கோபம் எனக்கு மட்டுமல்ல, ஊர் மக்கள் எல்லோருக்கும் புரிந்தது தான் இருக்கிறது. இக்கொடிய நச்சு ஆலையால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குடும்பங்களில் எங்களது குடும்பமும் ஒன்று. அதன் வலியும் வேதனையும் எனக்கு தெரியாமல் இல்லை. அனுபவித்தவர்கள் நாங்கள்.
மேலும் இது சம்பந்தமாக எனது கடும் கண்டனத்தை ஏற்கெனவே தெரிவித்து உள்ளேன். பார்க்க . Comment Reference No.: 41894. நான் அத்தகைய கருப்பு ஆடுகளுக்கு ஆதரவாக கருத்து எழுதவில்லை.
அதே சமயம், கருத்து எழுதும் போது நாய் பேய் என்ற சொற்றொடர்கள் வேண்டாமே என்பது தான் எனது கருத்து. எனது முந்தைய கருத்தை தாங்கள் தவறாக புரிந்தது கொண்டிருப்பீர்கலேயானால் பொருத்தருள வேண்டுகிறேன்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross