காயல்பட்டினத்தில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது கருமேகம் திரள்வதும், ஆறுதலுக்கு சிறிது சாரலைத் தெளித்துவிட்டுச் செல்வதுமாக இருந்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 30) நள்ளிரவு துவங்கி, காலை 10.00 மணி வரை நகரில் இதமழை பெய்துள்ளது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.
இன்று 15.00 மணி நிலவரப்படி, சிறிது வெயில் காணப்படுகிறது. வானிலை இதமாக உள்ளது.
மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |