தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளையின் முன்னாள் தலைவர் டபிள்யு.கே.செய்யித் முஹம்மத் புகாரீ என்ற வாவு புகாரீ 12.11.2014 அன்று காலமானார்.
இதையொட்டி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் வகையில், ஆம்பூர் தொகுதியின் மமக சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா, மமக மாநில அமைப்புச் செயலாளர் மண்ணை செல்லச்சாமி மற்றும் நிர்வாகிகள், காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரிலுள்ள மறைந்த வாவு புகாரீ இல்லத்திற்குச் சென்று, அவரது சகோதரர் வாவு கே.எஸ்.நாஸர், மகன் உள்ளிட்ட குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினர்.
தமுமுக இயக்கத்தின் வளர்ச்சிக்காக வாவு புகாரீ ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து பேசிய அவர்கள், அவரது மண்ணறை - மறுமை நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்தனர்.
தகவல் & படங்கள்:
தமீமுல் அன்ஸாரீ
தமுமுக / மமக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|