காயல்பட்டினத்தில் 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. குருவித்துறைப் பள்ளியில் அன்று காலை 09.45 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பள்ளியின் இமாம் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் தொழுகையை வழிநடத்த, ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ குத்பா உரையாற்றி, துஆ பிரார்த்தனை செய்தார்.
கலந்துகொண்டோர்:
இத்தொழுகையில், பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், துணைத்தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத், இணைச் செயலாளர்களான எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், கே.எஸ்.முஹம்மத் நூஹ், கே.எம்.செய்யித் அஹ்மத், கணக்கர் அஹ்மத் லெப்பை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகளான பிரபு சுல்தான், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், மதிமுக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், தேமுதிக மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளர் என்.டீ.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ, ஊழல் எதிர்ப்பு இயக்க செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யித் முஹம்மத் ஸாஹிப், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், பெங்களூரு காயல் நல மன்ற பொருாளாளர் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான், நகரப் பிரமுகர்களான எஸ்.எம்.கபீர் அரஃபாத் சிந்தா, கவிஞர் எஸ்.ஏ.நெய்னா, சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் சாபு, நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன், எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், கத்தர் காயல் நல மன்ற மூத்த செயற்குழு உறுப்பினர் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற செய்மூஸா உட்பட அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
வாழ்த்துக்கள் பரிமாற்றம்:
தொழுகை நிறைவுற்ற பின்னர், பொதுமக்கள் தமது நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, பெருநாள் வாழ்த்துக்களைக் கூறி, கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பெருநாள் தொழுகையையொட்டி, பள்ளி நலனுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. மொத்தம் 19 ஆயிரம் ரூபாய் சேகரமானது.
தொழுகை நிறைவுற்ற பின்னர், அனைவரும் குழுக்குழுவாக நின்று படமெடுத்துக்கொண்டனர்.
ஜியாரத் நிகழ்ச்சி:
பள்ளியில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்ற பின்னர், தொழுகையை வழிநடத்திய இமாம், குத்பா பேருரையாற்றிய கத்தீப் ஆகியோர் டங்கா (முரசு) முழங்க, பைத் பாடி அழைத்துச் செல்லப்பட்டனர். மஹான் ஈக்கியப்பா தைக்கா, மஹான் பெரிய முத்துவாப்பா தைக்கா ஆகிய இடங்களில் ஜியாரத்தை முடித்துவிட்டு, அனைவரும் களைந்து சென்றனர்.
தகவல்களுள் உதவி:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |