சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக 2 லட்சத்து 20 ஆயிரத்து 250 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 49ஆவது செயற்குழு கூட்டம், 04.09.2015 வெள்ளிக்கிழமையன்று, ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.அஹ்மத் ஸாலிஹ் இல்லத்தில், ஹாஜி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பமாக கூட்டத்தை இறைமறை ஓதி நயீமுல்லாஹ் துவக்க, அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வின் சாராம்சத்தை இப்ராஹிம் ஃபைஸல் வாசித்தார். பொறியாளர் எஸ்.எம்.ஏ.ஸதக்கதுல்லாஹ் வந்தோரை வரவேற்றார்.
நலத்திட்ட உதவிகள்:
ஷிபா (உலக காயல் நல மன்ற கூட்டமைப்பு) மூலம் பெறப்பட்ட 15 மருத்துவ கடிதங்கள் அலசப்பட்டு அவ்வகைக்கு ரூ. 1,73,500/ ஓதுக்கீடு செய்யப்பட்டு, அதோடு கல்வி மற்றும் சிறு தொழில் உதவியாக ரூ. 46,750/ வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
மாதாந்திர உணவுத் திட்டம்:
எம் மன்றத்தின் மூலம் கடந்த ஒரு வருடமாக வழங்கி வரும் மாதாந்திர உணவுத் திட்டத்தை மேலும் 12 குடும்பங்களுக்கு தொடர்வது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
புறநகர் பள்ளிகளுக்கு உதவி திட்டம்:
எமது மன்றத்தின் முயற்சியாக புறநகர் பள்ளிகளுக்கு இலவச சீருடை, பாட புத்தகம் மற்றும் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளிகளை கண்டெடுத்து (அருணாசலபுரம், மங்கலவாடி, ஓடக்கரை) அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம், எம்மன்ற காயல் பிரதிநிதி தர்வேஷ் முஹம்மது அவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பொருட்கள் வழங்கியதை கூஸ் அபு மற்றும் பீ.எம்.எஸ்.லெப்பை ஆகியோர் மன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்துக்கொண்ட, மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் நூர் முஹம்மது ஜக்கரிய்யா, லால்பேட்டை நாஸர், தாவூத் லெப்பை மற்றும் எம்.எம்.எல்.செய்யத் முஹம்மத் ஆகியோர் தங்கள் மேலான ஆலோசனைகளையும் அரிவுரைகளையும் வழங்கினர்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸுஃபீ, எஸ்.ஏ.சி.ஸாலிஹ், ஹாஜியார் ஸாலிஹ் ஆகியோர் ஏற்பாட்டில் அருமையான பிரியாணி சாப்பாடு மதிய உணவாகப் பரிமாறப்பட்டது.
இறுதியாக ஷஃபீயுல்லாஹ் நன்றி நவில, மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் துஆ பிரார்த்தனையோடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. எல்லாப்புகழும் இறைவனுக்கே! நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
N.M.செய்யித் இஸ்மாயீல்
ஹாஃபிழ் S.A.C.அஹ்மத் ஸாலிஹ்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (48ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |