தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், 23.09.2015 புதன்கிழமையன்று அரஃபா நாளென்றும், 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, 24.09.2015 வியாழக்கிழமை காலை 07.30 மணிக்கு பெருநாள் தொழுகை, காயல்பட்டினம் குட்டியாபள்ளி திடலில் நடத்தப்பட்டது.
ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ தொழுகையை வழிநடத்தியதோடு, குத்பா பேருரையும் ஆற்றினார்.
பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டிருந்த இத்தொழுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ஷம்சுத்தீன், சாளை முஹம்மத் அப்துல் காதிர், ‘ஜப்பான்’ சுலைமான், ஷஃபீக்குர்ரஹ்மான், லக்கி மக்கீ, தேக் முஜீப் உள்ளிட்ட நிர்வாகிகள், நகரப் பிரமுகர்களான டாக்டர் எம்.ஏ.அபுல்ஹஸன், எஸ்.இ.மரைக்கார் ஆலிம், வி.பி.ஷம்சுத்தீன், எஸ்.எச்.நூருல் அமீன், கோஸ் முஹம்மத், மவ்லவீ எம்.எம்.அஹ்மத் ஸாஹிப், ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் உட்பட நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்றதும், ஆண்கள் பகுதியிலிருந்து 20 ஆயிரம் ரூபாயும், பெண்கள் பகுதியிலிருந்து 22 ஆயிரத்து 500 ரூபாயும் என மொத்தம் 42 ஆயிரத்து 500 ரூபாய் தொகையும், ஒரு தங்க மோதிரமும் ஏழைகள் நல நிதிக்கான நன்கொடையாக சேகரிக்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
‘தேக்’ முஜீப்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 12:00 pm / 02.10.2015] |