காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் - சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் துவங்கப்பட்டதை எதிர்த்து, கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு
நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மே மாதம் வழக்கு
தொடர்ந்தனர்.
ஏறத்தாழ நான்கு மாதங்கள் நீடித்த இவ்வழக்கில் வாதங்கள் செப்டம்பர் 9 அன்று நிறைவுற்றன. பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் தேதி குறிப்பிடாமல், அன்றைய தினம் - வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்தனர்.
ஒவ்வொரு நாளின் வாதங்களின் நிறைவில் - தினசரி ஆணைகள் (DAILY ORDERS), தேசிய பசுமை தீர்ப்பாய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது வழமை.
இவ்வழக்கின் அன்றாட ஆணைகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படவில்லை. தற்போது அவை வெளியாகியுள்ளன:
மே 21, 2015
ஜூலை 9, 2015
ஜூலை 20, 2015
ஜூலை 30, 2015
ஆகஸ்ட் 14, 2015
ஆகஸ்ட் 18, 2015
ஆகஸ்ட் 19, 2015
ஆகஸ்ட் 28, 2015
செப்டம்பர் 8, 2015
செப்டம்பர் 9, 2015
|