காயல்பட்டினத்தில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 30) நள்ளிரவு துவங்கி, காலை 10.00 மணி வரை நகரில் இதமழை பெய்தது. அதன் பிறகு, சிறிது வெயில் இருந்தபோதிலும், இதமான வானிலையே நிலவியது.
இந்நிலையில், இன்று மாலையில் மீண்டும் சாரல் பெய்யத் துவங்கியது. 18.30 மணியளவில் திடீரென அது இதமழையாக உருவெடுத்துப் பெய்தது. இதன் காரணமாக, கடற்கரையில் அமர்ந்திருந்தோர் ஒட்டுமொத்தமாக எழுந்து கலைந்து சென்றனர்.
அவர்களுள் ஒரு சாரார் மட்டும் மாலைப் பொழுதை கடற்கரையிலேயே கழிக்க சபதம் எடுத்துக்கொண்டவர்களாக, ஆண்கள் பகுதி மண்டபத்திற்குள் தஞ்சம் புகுந்தனர்.
19.00 மணியளவில் மழை நின்றது. மீண்டும் 21.15 மணியளவில் துவங்கி, தொடர்ந்து இதமழை பெய்து வருகிறது.
மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |