மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், அதன் மக்கள் பணிகள் விளக்கப் பொதுக்கூட்டம், 26.09.2015 சனிக்கிழமையன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
மமக நகர செயலாளர் எஸ்.ஏ.கே.ஐதுரூஸ் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் ஜோஸப் நொலாஸ்கோ, மாவட்ட பொருளாளர் மோத்தி முஸம்மில், தமுமுக மாவட்ட செயலாளர் யூஸுஃப், மமக மாவட்ட துணைச் செயலாளர்களான ‘முர்ஷித்’ முஹ்ஸின், கே.ரஃபீக், ஏ.ஜாஹிர் ஹுஸைன், மமக - தமுமுக நகர நிர்வாகிகளான ஏ.ஷம்சுத்தீன், எஸ்.நவாஸ், எஸ்.ஷேக் முஹம்மத் முஸ்தஃபா, கே.எம்.ஹனீஃபா ரியாஸ் முகைதீன், ஏ.ஜெ.ஷாஹுல் ஹமீத், பீ.எம்.இம்தாதுல்லாஹ், டி.ஜகுபர் அலீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மமக நகர துணைச் செயலாளர் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஆஸாத் துவக்கவுரையாற்றினார்.
இப்பொதுக்கூட்டத்தில், மமகவின் ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.அஸ்லம் பாட்ஷா, மமக மாநில இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், மமக மாநில அமைப்புச் செயலாளர் மண்ணை செல்லச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஹஸன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், தமுமுக - மமக தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளிலிருந்து அதன் அங்கத்தினரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
தமீமுல் அன்ஸாரீ
தமுமுக / மமக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|