காயல்பட்டினத்தில் 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகங்களின் சார்பில், அன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்தினார்.
பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் (முர்ஷித்), எம்.ஐ.மெஹர் அலீ, அப்பா பள்ளி தலைவர் எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., அல்ஜாமிஉல் அஸ்ஹர் பொருளாளர் எம்.என்.எம்.ஐ.மக்கீ, துணைத்தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களான எஸ்.எம்.அமானுல்லாஹ், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.அப்துல் ஜப்பார், எழுத்தாளர்களான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) தலைவர் எம்.ஏ.புகாரீ (48) உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இத்தொழுகையின்போது, ஏழைகள் துயர் துடைக்கும் ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளைக்காக
ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 75,955 தொகையும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 72,045 தொகையும் என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் தொகை நன்கொடையாகப் பெறப்பட்டது.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
தகவல் உதவி:
M.A.புகாரீ (48)
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஐ.ஐ.எம். சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்ட ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |