ஜன்சேவா கடன் வழங்கும் சங்கத்தின் காயல்பட்டினம் கிளை பங்குதாரர்களுக்கான சிறப்பு கலந்தாலோசனைக் கூட்டம், இன்று (29.09.2015 செவ்வாய்க்கிழமை) 16.30 மணியளவில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள ஹமீதிய்யா பெண்கள் தைக்காவில் நடைபெறவுள்ளது.
ஜன்சேவாவின் மத்திய நிர்வாக இயக்குநர் அத்தீக்குர் ரஹ்மான் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கருத்துப்பரிமாறவுள்ளதாகவும், ஆண் - பெண்களுக்கு தனித்தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஜன்சேவாவின் பங்குதாரர்களும், உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறும், அந்நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
I.அப்துர் ரஹீம்
ஜன்சேவா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |