காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், கடந்த 2014-15 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்று முடித்த 85 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி 26.09.2015 சனிக்கிழமையன்று, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், வாழ்த்துரையாற்றியதோடு, மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி, வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி, பள்ளிப் பகுதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின்போது, மொத்தமுள்ள 105 மாணவர்களுள் முதற்கட்டமாக 085 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் S.B.B.புகாரீ
எல்.கே.மேனிலைப்பள்ளியில், கடந்தாண்டு (2014) தமிழக அரசின் மடிக்கணினி வழங்கப்பட்ட நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |