காயல்பட்டினம் நகராட்சியின் 13வது வார்டு - பப்பரப்பள்ளி பகுதியில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. சமீபத்தில் குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு அருகில் குடியிருப்புகள் பெருகியுள்ள சூழலில், தொடர்ந்து அங்கு குப்பைகளை கொட்ட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரவாரம் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், இன்று (28-9-2015) காயல்பட்டினம் நகராட்சியின் 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீன், தனது வார்டுக்கு உட்பட்ட பப்பரப்பள்ளி பகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டு, நகரில் உள்ள அரசு / நகராட்சிக்கு பாத்தியப்பட்ட பல்வேறு இடங்களில் ஒன்றில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.
தனது மனுவோடு, அரசு / நகராட்சி புறம்போக்கு நிலங்கள் விபரங்களையும் 13வது வார்டு உறுப்பினர் இணைத்து சமர்ப்பித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ம்.ரவிகுமார் IAS, அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருக்கு தெரிவித்துள்ளார் என 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீன் கூறினார்.
|