திருநெல்வேலி அன்னை வேளாங்கன்னி மருத்துவமனையுடன் இணைந்து, காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை நடத்திய மருத்துவ இலவச முகாமில், 748 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
திருநெல்வேலி அன்னை வேளாங்கன்னி மருத்துவமனையுடன் இணைந்து, காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை நடத்திய மருத்துவ இலவச முகாம், 27.09.2015 ஞாயிற்றுக்கிழமையன்று, துளிர் பள்ளியில் நடைபெற்றது.
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி, டாக்டர் நம்பியப்பன், தோல் நோய் மருத்துவத்திற்காக டாக்டர் மஹாகிருஷ்ணன், டாக்டர் நிர்மலா தேவி செல்வம், மூளை நரம்பியல் பிரிவில் டாக்டர் கனி, டாக்டர் முஹம்மத் இர்ஷாத், எலும்பு - மூட்டு பிரிவில் டாக்டர் இராஜராஜன், மகப்பேறு பிரிவில் டாக்டர் சி.ஜிஜி செல்வம், மனநலப் பிரிவில் டாக்டர் ஜெசூர் குமார், காது - மூக்கு - தொண்டை பிரிவில் டாக்டர் சுந்தர்சிங், பொது மருத்துவப் பிரிவில் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ், டாக்டர் ஜாஃபர் ஸாதிக், பல் மருத்துவப் பிரிவில் டாக்டர் உனைஸ் மவ்லானா, பேச்சு மற்றும் செவித்திறன் பிரிவில் டாக்டர் இராவண்ணன் உட்பட 15க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமில் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் அனைத்தும், மருத்துவர்களின் தன்னார்வத்தால் விலையின்றி வழங்கப்பட்டன. இம்முகாமில் மொத்தம் 748 பேர் பயன்பெற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை, துளிர் அறக்கட்டளை நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத், செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, அறங்காவலர் வி.எஸ்.ஏ,ஆயிஷா ஆகியோரின் ஆலோசனையின் கீழ், துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் செய்திருந்தார்.
துளிர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |