காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 03ஆவது வார்டு, பிலால்நகர், நெய்னார் தெருவிலுள்ள கதிஜா நாயகி பெண்கள் தைக்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் டி.சி.டபிள்யு. நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், இதையடுத்து டி.சி.டபிள்யு. நிறுவனம் சார்பில் சுமார் இரண்டு லட்சம் செலவில் தளம் அமைத்தல் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
திறப்பு விழா நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமாவும் கலந்துகொண்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என, பின்வருமாறு அவர் தன்னிலை விளக்கமளித்துள்ளார்:-
|