காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம்.மொஹிதீன் என்ற மும்பை மொஹிதீன் உட்பட 14 உறுப்பினர்கள் கையெழுதிட்ட கடிதம்
ஒன்று நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேகுக்கு செப்டம்பர் 15 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் - நான்கு பொருட்களை குறிப்பிட்டு, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) விதிகள்படி -
செப்டம்பர் 25 க்குள், நகர்மன்றத் தலைவர் கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கூட்டவில்லை என்றால் - துணைத் தலைவர் கொண்டு
- செப்டம்பர் 25 அன்று கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் - இவ்வாறு நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்ட கோருவது இது மூன்றாவது முறையாகும். இந்த முறைப்படி - உறுப்பினர்கள்
ஏற்பாட்டில் ஜூலை 27 அன்று நடந்த கூட்டத்தினை எதிர்த்து நகர்மன்றத் தலைவர் தொடுத்த வழக்கில்,
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இடைக்கால தடை வழங்கியுள்ளது
நினைவிருக்கலாம்.
இவ்வாறு உறுப்பினர்கள் கோருவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா என்பதனை விரிவாக காணலாம்.
TAMIL NADU DISTRICT MUNICIPALITIES ACT, 1920; SCHEDULE III - RULES REGARDING PROCEEDINGS OF THE COUNCIL
(See section 25) MODE OF TRANSACTING BUSINESS
...
3. (1) The Chairman shall, on the requisition in writing of not less than one-third of the members then on the Council,
convene a meeting of the Council, provided that the requisition specifies the day (not being a public holiday as defined in
the Explanation to rule (1)) when and the purpose for which the meeting is to be held. [Only urgent matters of local
importance relating to municipal administration which cannot wait till the next ordinary or urgent meeting shall be
considered at special meetings and not more than one subject shall be considered at such meetings.] The requisition shall be
delivered at the municipal office during office hours to the Chairman, secretary, manager or any other person who may then be
in charge of the office at least ten clear days before the day of the meeting.
(2) If the Chairman fails within forty-eight hours from the delivery of such requisition to call a meeting on the day
specified therein, or within three days thereafter, the meeting may be called by the members who signed the requisition on
giving the notice provided for in sub-rule (1) of rule 2 to the other members of the Council.
...
மேலே வழங்கப்பட்டுள்ளது - இது போன்ற உறுப்பினர்கள் கோரிக்கை குறித்த சட்ட விதிமுறைகள். அவைகள் என்ன கூறுகின்றன?
குறைந்தது மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் - எழுத்துப்பூர்வமாக நகர்மன்றத் தலைவரிடம் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் - நகர்மன்றத் தலைவர்
கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் (அக்கடிதத்தில்) - கூட்டத்தினை நடத்துவதற்கான நாள், நேரம் மற்றும் காரணமும் குறிப்பிட
வேண்டும்.
தெரிவிக்கப்படும் காரணமும் உள்ளூர் அளவில் நகராட்சி நிர்வாகம் குறித்த மிகவும் அவசரமான - அடுத்த சாதாரண கூட்டம் வரை காத்திருக்க இயலாத - விசயமாக இருக்கவேண்டும். மேலும் அது போன்ற
கூட்டங்களில் ஒரு பொருள் மட்டும் தான் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
இந்த கடிதம் - அலுவல் நேரத்தில், நகர்மன்றத் தலைவர், செயலர், மேலாளர் அல்லது அவ்வேளையில் அலுவலகத்தில் பொறுப்பில் உள்ள வேறு
ஒருவரிடமோ - கூட்டம் நடத்த குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் இருந்து தெளிவான 10 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டும்.
கடிதம் வழங்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது அதில் இருந்து மூன்று நாட்களுக்குள், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கூட்டத்தினை
கூட்ட, அழைப்பு விட - நகர்மன்றத் தலைவர் தவறினால், கடிதத்தில் கையெழுத்திட்ட உறுப்பினர்கள் - கடிதத்தில் தெரிவித்தவாறு கூட்டத்தை கூட்டலாம்.
இது தான் விதிமுறை. இனி - இந்த விதிமுறைகள் - உறுப்பினர்கள் விடுத்துள்ள மூன்று அழைப்புகளிலும், எந்த அளவு கடைபிடிக்கப்பட்டன
என்பதனை காணலாம்.
(1) ஜூலை 7 அழைப்பு; ஜூலை 27 கூட்டம்
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அறிவுரைப்படி என்று துவங்கி, 43 பொருட்கள் கொண்டு கூட்டத்தினை நடத்திட -
உறுப்பினர்கள், ஜூலை 7 தேதிய கடிதத்தை - நகர்மன்றத் தலைவருக்கு அனுப்பினார்கள்.
அந்த கடிதத்தில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3படி கூட்டத்தினை கூட்ட அழைப்பு விடப்படுகிறது என்றும்
தெரிவிக்கவில்லை; எந்த நாளில் கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட தேதியும் தெரிவிக்கப்படவில்லை.
அதை விட முக்கியமாக, விதிமுறைகள் அனுமதித்தப்படி - ஒரு பொருள் குறித்து மட்டும் அல்லாமல், மன்றப் பொருள் 1, மன்றப் பொருள் 2 என
- சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் குறித்து, 43 மன்ற பொருட்கள், ஜூலை 7 கடிதத்தில் இடம்பெற்றிருந்தன.
இக்கடிதத்திற்கு பதில் வழங்கிய நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் அனுப்பியுள்ள 43 பொருட்களையும்
இணைத்து சாதாரண கூட்டத்தினை நடத்த ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் - விதிமுறை
குறிப்பிடப்படாவிட்டாலும், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3படி - ஒரு பொருள் கொண்டு தான் கூட்டத்தினை
உறுப்பினர்களால் அழைக்க முடியும் என்றும் - உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்தார்.
இக்கடிதத்தினை தொடர்ந்து, ஜூலை 27 அன்று கூட்டத்தினை நடத்த, ஜூலை 23 அன்று கூட்டப் பொருளை விநியோகம் செய்த உறுப்பினர்கள்,
மன்ற பொருள் 1, மன்ற பொருள் 2 என மன்ற பொருள் 43 வரை - ஜூலை 7 கடிதத்தில் - இருந்த பொருட்களை, மன்றப்பொருள் என
குறிப்பிடாமல் - 1, 2 என 43 வரை எண்களை மட்டும் குறிப்பிட்டு, மன்றப் பொருள் 1 என அமைச்சர் பரிந்துரையை முன்னுரையாக மாற்றி
அனுப்பினர். அந்த அடிப்படையில், இந்த கூட்டத்தினை நடத்த அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உட்பட பல அதிகாரிகளுக்கு
நகர்மன்றத் தலைவர் தகவல் தெரிவித்த பிறகும், துணைத் தலைவர் தலைமையில் ஜூலை 27 அன்று
கூட்டம் நடத்தப்பட்டது.
ஜூலை 27 கூட்டத்திற்கு முன்னோடியாக நகர்மன்றத் தலைவருக்கு அனுப்பிய ஜூலை 7 கடிதத்தில், மன்றப் பொருள் 1, மன்றப் பொருள் 2 ...
மன்றப் பொருள் 43 என குறிப்பிட்டிருந்த உறுப்பினர்கள், மன்றப் பொருள் என்ற சொற்களை மட்டும் நீக்கி, மன்றப் பொருள் 1 என்ற தலைப்பு கீழ் -
43 பொருட்களை - வெறும் எண்கள் கொண்டு பதிவு செய்திருந்தாலும், இது போன்ற கூட்டங்களில் ஒரு பொருள் மட்டுமே விவாதிக்கப்படவேண்டும்
என்ற காரணம் உட்பட பல காரணங்களுக்காக நகர்மன்றத் தலைவர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை
கிளை - அந்த கூட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால் தடை விதித்தது.
(2) ஆகஸ்ட் 27 அழைப்பு; செப்டம்பர் 11 கூட்டம்
இடைக்கால தடை வழங்கப்பட்ட ஜூலை 27 கூட்டத்தினை தொடர்ந்து, மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) யை
மேற்கோள்காட்டி, ஆகஸ்ட் 27 அன்றும், சில திருத்தங்கள் மேற்கொண்டு செப்டம்பர் 2 அன்றும், நகர்மன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஒரு கடிதத்தை - நகர்மன்றத் தலைவருக்கு
அனுப்பினர். அதில் - ஒரே ஒரு பொருள் (சி கஸ்டம்ஸ் சாலை புனரமைப்பு) இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டம், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தலைமையில் - செப்டம்பர் 11 அன்று
நடைபெற்றது.
(3) செப்டம்பர் 15 அழைப்பு
செப்டம்பர் 11 கூட்டத்தினை தொடர்ந்து - செப்டம்பர் 22 அன்று சாதாரண கூட்டத்தினை நடத்திட, நகர்மன்றத் தலைவர் - செப்டம்பர் 14 அன்று ஆணையருக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே - உறுப்பினர்கள் கையெழுதிட்ட, செப்டம்பர் 15 தேதிய கடிதம் நகர்மன்றத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் - மன்ற பொருள்
1 என்ற தலைப்பு கீழ் - நான்கு வெவ்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூலை 27 கூட்டத்திற்கு முன்னர், முதலில் மன்றப்பொருள் 1, மன்றப்பொருள் 2, மன்றப்பொருள் 3 ... என்றும், பின்னர் (1), (2), (3) ...
என்றும் கூட்டப் பொருளை விநியோகம் செய்த உறுப்பினர்கள் - தங்களின் செப்டம்பர் 15 கடிதத்தில் - நான்கு பொருட்களுக்கு எண்கள் எதுவும்
கொடுக்காமல், அடுத்ததடுத்த வரிகளில் அவற்றினை பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(1) விதிக்கும் - ஒரே ஒரு பொருள் தான் இது போன்ற உறுப்பினர்கள்
கோரிக்கைகளில் இடம்பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க உறுப்பினர்கள் இவ்வாறு செய்திருப்பது, வேடிக்கையானது மட்டும்
அல்ல, சட்டத்தினை கேலி கூத்தாக்கும் விதமாகவும் உள்ளது. |