காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 12.9.2015 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில், அதன் செயலாளர் எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 12.9.2015 சனிக்கிழமையன்று, அமைப்பின் செயற்குழு உறுப்பினர் டி.செய்யது இஸ்மாயில் இல்லத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
ஹாஃபிழ் ஏ. எல். இர்ஷாத் அலி கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் கிலுர் முஹம்மது ஹல்லாஜ் வரவேற்புரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, செயலாளர் எம்.செய்யது அஹமது கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் பி.எஸ்.ஏ.அஹமது கபீர் சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
(2) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி, கத்தர் காயல் நல மன்றம், ஷிஃபா, கே.எம்.டி. மருத்துவமனை, ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் ஆகியவற்றுடன் ஹாங்காங் பேரவையும் இணைந்து நடத்தவிருக்கும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(3) பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, செப்டம்பர் மாதம் 24ம் தேதி ஹஜ் பெருநாளன்று இரவு 7.00 மணிக்கு, ஹாங்காங் ஜோர்டனிலுள்ள இந்தியா கிளப்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஹாங்காங் - மக்காவ் - சீனா ஆகிய பகுதிகளில் வசித்து வரும் காயலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்த்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் எம்.செய்யது அஹமது நன்றி கூற, துணைத் தலைவர் பி.எஸ்.ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி செயற்குழு உறுப்பினர் டி.செய்யது இஸ்மாயில் அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
|