ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அறிவகம் காயல்பட்டினம் நகர குழுவின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.3,000 என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வருமாறு:-
அறிவகத்தின் முந்தைய (ஹிஜ்ரீ 1431) உள்ஹிய்யா அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|