10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைபட்டிருக்கும் அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
10ஆண்டு மேல் சிறையில் உள்ள அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யகோரி பாப்புலர் பிரண்ட் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.. காரணம்,
2013-ஆம் வருட புள்ளிவிவரப்படி இந்தியச் சிறைகளில் 1,597 சிறைவாசிகள் உயிரிழந்தனர். அதில் தற்கொலை 115.
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்மந்தமாக முஸ்லிம் சமூகத்திலிருந்து தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் தமிழக அரசு மனம் இறங்கி அவர்களை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ல் விடுதலைக்கான அறிவிப்பை உடனே அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கடந்த (29-08-2015) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
மனித உரிமையில் ஆர்வமுள்ள பலர் இதுபோன்று பல்வேறு போராட்டங்களை நடத்திய போதும், விடுதலை குறித்து இது வரை எந்த அறிவிப்பும் வராதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனவே போராட்டத்தின் அடுத்த கட்டமாக தமிழக அரசின் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு சேர்க்கும் விதமாக மாநிலம் தzழுவிய அளவில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானித்திருந்தது.
அதன்படி, காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் ஜும்ஆ பள்ளி ஆகிய பள்ளிவாசல்களில், ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |