என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[16 September 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41864
அல்ஹம்திலில்லாஹ்! பெருநாள் மகிழ்வு மனதில் இக்கணத் திலிருந்தே குடியேற ஆரம்பித்து விட்டது.கண்ணியமிகு காயல் மக்கள் அனைவர்களும் அளவற்ற மகிழ்வுடன் அலைமோத போகிறார்கள் அன்றைய பெருநாள் இரவன்று பஜாரில்!
அக் கண் கொள்ளாக்காட்சியையும்,அந்த ஒருங்கிணைப்பான ஒற்றுமையின் ஒய்யார ஒன்று கூடலையும் காண ,கலந்து கொள்ள இருக்கும் அனைவர்களும் பாக்கியம் பெற்றவர்களே. இன்ஷா அல்லாஹ்!
கடந்த 2010 ம் வருடம் என்று நினைக்கிறேன் ஒரு நோன்பு பெருநாளைக்கூட இதுபோல் அனைவர்களும் கொண்டாடினோம் அந்த இரவை சந்தித்த உலகின் அத்தனை நாடுகளிலும் நோன்புபெருநாள் பிறை தென்பட்டது!
சிலமாதங்களுக்கு முன் ஒரு இஸ்லாமிய இயக்கத்தலைவர் பூமி உருண்டையை உதாரணம் காட்டி (விஞ்சான அடிப்படையில்), சர்வதேச பிறையை பின்பற்றுபவர்களுக்கு
எப்படியும் ஒருநாள் முன்னர் உள்ள நாளையைத்தான் அவர்கள் "அமல்" செய்யக்கூடிய நிலைவரும்,சில காலங்களில் 28 கழித்து பிறை 29-ல் கூட பெருநாள் வரக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம்,எப்படியும் பல தடவையோ அல்லது ஒரு தடவையோ 29 நாளன்று பெருநாளை அடைந்தே தீருவார்கள். ஆகவே, எல்லோரும் ஒரே நாளில் உலகின் பல பகுதிகளிலும்,நம் தமிழ்நாட்டிலும் ஒரே நேரத்தில் பிறை காணவே முடியாது என்று அடித்து சொன்ன அந்த தனி நபரின் கணக்கைகெல்லாம் தவிடு பொடியாக்கி தனியோனாம் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் பெருநாள் பிறையை ஒரே நேரத்தில் காண்பித்து நம்மனைத்து இதயங்களையும் குளிர வைத்து விட்டான்!
வரும் காலங்களிலும் இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற பெருநாள் இன்பத்தை எல்லோரும் எப்பழுதில்லாமல் பருகி திளைத்து மகிழ்ந்திட மறை தந்த இறையோன் வழி வகுத்தருள் வானாக ஆமீன்! அனைத்து உள்ளங்களுக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross