Re:...பழகிப் போய் விட்டது குளிர்விட்டு போய் விட்டது posted bymackie noohuthambi (colombo)[17 September 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41868
ஒரே நாளில் ஊரெங்கும் பெருநாள் என்ற செய்தி இப்போது புளித்துப் போய் விட்டது. அந்த குதூகலம் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன.பல நாட்கள் ஒரே வீட்டில் பெருநாள் என்று நமக்கு பழகி போய்விட்டது. குளிர்விட்டு போய் விட்டது.
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம் என்று சொல்வது போல் பலதரப்பட்ட கருத்துக்களுடன் களமிறங்கிய நமக்கு வழி காட்டும் ஒளி விளக்குகளாக விளங்கிய நமது உலமாக்கள் பார்த்த பார்வை இது. சாதாரண சாமானியனும் குர் ஆன் ஹதீதை தன் கைக்குள் எடுத்துக் கொண்டு பல மாதிரியான விளக்கங்களை சொல்வதால் ஏற்பட்ட சமுதாய பின்னடைவு இது. இந்த சந்தோஷம் நீடிக்க முடியாமல் இன்னொரு கூட்டம் பெருநாளை வேறொரு நாளில் கொண்டாடுகிறார்கள்.
அல்லாஹ் திருமறையில் அழகாக சொல்கிறான் ASAA RABBUKUM ANN YARHAMAKUM VA INN UDHTHUM UDHNAA.....நீங்கள் குழப்பம் செய்வதை விட்டும் விலகிக் கொண்டால் உங்கள் இரட்சகன் உங்கள் மீது கருணை புரிய போதுமானவன் அவ்வாறின்றி உங்கள் குழப்பத்தின்பாலே பின்னும் நீங்கள் திரும்புவீர்களானால் நாமும் தண்டிக்க திரும்புவோம் சூரா பனீ இஸ்ரஈல் 8வது வசனம் இப்படி சொல்கிறது.சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு மிக அருமையான அறிவுரை இது.
ALLAAHU AKBAR KABEERA VAL HAMDHU LILLAAHI KATHEERAA...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross