எல்லாம் இறைவன் நாட்டம்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[28 September 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41892
2 வது வார்டு கவுன்சிலர் சகோதரி V M S முகமது செய்யது பாத்திமா அவர்களின் விளக்கம் ஏற்றுகொள்ள கூடியதாக அல்ல..! பல சந்தேகங்களை மேலும் மேலும் தீவிரப்படுத்தும் வகையிலேயே உள்ளது.
சமீப காலம் முன்பு நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்த ஒரு உதாரணம் ஒன்றே போதுமானது அதாவது நமது 2 வது வார்டு கவுன்சிலர் சகோதரி V M S முகமது செய்யது பாத்திமா அவர்கள் உண்மையிலேயே இரசாயன தொழிற்சாலையின் அமில கழிவு நடவடிக்கை அதன் செயல்பாடுகள் மீது அதிருப்தி ஏற்பட்டு அத்தொழிற்சாலையை வெறுத்து இருப்பாரேயானால் நகராட்சி ஆணையாளர் மூலம் முறைகேடாக, திருட்டுத்தனமாக, சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்ட இந்த இரசாயன உற்பத்தி ஆலைக்கு அதன் விரிவாக்க கட்டிட அனுமதியை ரத்து செய்யும் தீர்மானத்தை நகர்மன்ற தலைவர் கொண்டு வந்த போது எந்த மறுப்பும் கால தாமதமும் தெரிவிக்காமல் நகரில் புற்று நோயால் அவதிப்படும் குழந்தைகள், முதியவர்கள் இவர்களின் சரீர நல்வாழ்வு நன்மைகளை மட்டுமே மனதில் நினைத்து நமது 2 வது வார்டு கவுன்சிலர் சகோதரி V M S முகமது செய்யது பாத்திமா அவர்கள் அத்தீர்மானத்தை ஆதரவளித்து நிறைவேற்றி இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
நடந்தது நடந்து விட்டது...! ஒருவர் இன்னொருவர் மீது பழியை போடுவது பிறகு அவர் மூன்றாவது நபர் மீது பழியை போடுவது இப்படியே தொடர வேண்டாம் - இனியாவது தவறுகளை உணர்ந்து பாவம் அறியாத அப்பாவி நமது குழந்தைகள் எதிர்கொள்ளும் கொடிய நோயில் இருந்து மீள நம் வருங்கால சந்ததிகள் நலமோடு வாழ (நகர்மன்ற உறுப்பினர்கள்) ஒருமித்த கருத்தோடு தொழிற்சாலை விரிவாக்க அனுமதியை தடை செய்யும் விதமாக - ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரிப்பீர்கள்...
நமது அடுத்த தலைமுறைகள் உங்களை வாழ்த்தி வல்ல இறைவனிடம் உங்களின் சரீர உடல் நலத்திற்காக பிராத்தனைகள் செய்வார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross