செய்தி: டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் - நயினார் தெரு கதிஜா நாயகி பெண்கள் தைக்காவிற்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதி! 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கருப்பு ஆடுகளின் முகத்திரை கிழியப்பட வேண்டும் posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[29 September 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 41909
நமதூருக்கு எதிர்ப்பாகவோ,அல்லது நமதூரை மதிக்காமல், கிடக்கிறார்கள் இவர்கள்,இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்புடனோ எலும்புத்துண்டுக்காக அலையும் சில எச்சிலை நாய்கள் நமதூரில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இவர்கள் நமதூருக்கும் நம் மக்களுக்கும் எதிராக என்ன வேண்டுமானாலும் செய்ய சிறிதும் தயங்காத துரோகிகள்!
பணத்திற்காக DCW யிடம் மட்டுமென்ன, மாது,மது விற்பனை வியாபர உரிமையாளர்களிடம் கூட பச்சோந்தித்தனமாக பல்ளிளித்து, பணத்திற்காக அவர்கள் பாதம் கழிவியேனும் ஈனத்தனமாக தங்கள் வாழ்க்கையை நடத்துவதோடு பல நல்லவர்களையும் அவர்களின் சூழ்ச்சி வலையில் விழச்செய்யும் சில பேடிகளின் சித்து விளையாட்டுகளில் ஒன்றுதான் இந்த தைக்கா உதவி நிகழ்ச்சியாகும்!
தைக்கா நிர்வாகமும் அந்த ஜமாத்தும் இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்கவில்லை என்றும் அந்த நிகழ்விற்க்காக மனம் வருந்துவதாகவும் அறிக்கை வெளியிட்டிருப்பது சற்று ஆறுதலை தந்தாலும்,இந்த கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து ஊருக்கு தெரியப்படுத்துவது அவர்கள் கடமையாகும்.
அந்த புகைப்படத்திலுள்ள அவர்கள் ஜமாத்து ஆட்களை விசாரணை செய்வதும் அவர்கள் உரிமையாகும்!
DCW யிடம் பணமே பெறாவிட்டாலும் அந்த ஆலையின் உதவித்தலைவர் அந்த நிகழ்ச்சிக்கு வரக்காரணம் என்ன?சாதாரணமாகக்கூட அவரை கூப்பிடலாமா?அவர்களின் ஆலையின் நிகழ்ச்சிகளுக்கு நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டதற்கு, நம் கண்டனத்தால் கடித்து குதறும் நாம், அந்த ஆலையின் தலைவரையே நம் புனித குரான் ஓதும் ஒரு புண்ணிய இடமாகிய தைக்காவிற்கு அழைத்திருக்கிறோம் என்றால் நமதூரை சுற்றியுள்ள அனைத்து பகுதி மக்களும் நம்மை பார்த்து ஏளனம் செய்ய மாட்டார்களா? இவர்களை எவுவ்ளவு அடித்தாலும் தாங்கும் ஜென்மங்களடா என்று இழிசொல் மழையை பொழிய மாட்டார்களா?
ஆகவே,அன்பு காயல் நெஞ்சங்களே, ஊருக்கு துரோகம் விளையும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு காரணமாக இருக்கும் கயமை குணமுள்ள கருப்பு ஆடுகளின் முகத்திரையை கிழித்தெறிந்து ஊருக்கு அவர்களை அடையாளம் காட்டுவது ஒவ்வொரு உண்மையான காயலர்களின் கடமையாகும்!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross