செய்தி: மமகவின் மக்கள் பணிகள் விளக்கப் பொதுக்கூட்டம்! சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சிறப்புரை!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புண்ணியங்கள் செய்யும் கண்ணியவான்கள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[01 October 2015] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 41933
மனித நேய மக்கள் கட்சி.என்கின்ற பொருத்தமான பெயரை தாங்கிய கட்சி. பெயருக்கேற்ப மனித நேயங்களுடன் தங்கள் நற்செவைகளை எந்த பாகுபாடின்றி மக்களுக்காக ஆற்றிவரும் மேன்மை குணத்திற்கு சொந்தமுடைய ஒரு அமைப்பு!
அல்லாஹ்வை வணங்குங்கள் என்கின்ற அறிவுரைகளோடு நிர்கதியற்ற நிலையில் அல்லலுறும் அல்லாஹ்வின் அடியார்களுக்கு அவர்களுக்காக உதவமுடிகின்ற அத்தனை உதவிகளையும் ஓடோடி சென்று முதன் முதலாக உதவுகின்ற இந்த இயக்க உத்தமர்கள்தான் வல்ல அல்லாஹ்வின் அன்புக்குறியவர்கள் ஆவார்கள்!
அல்லாஹ்வை வணங்குங்கள் என்று ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு தங்கள் வாழ்வு வசதிகளின் பாதைகளில் மட்டும் பயணிப்பவர்களின் "பயானை" படைத்தவன் எந்த இடத்தில் வைப்பான் என்பதை ஏந்தல் நபி(ஸல்)அவர்களின் அழகிய வழிகாட்டலில் நாமனைவர்களும் அறிந்ததே!
இந்த மேடயில் இருக்கும் ஒரு இளகியஇதய சகோதரர், என்னுடைய வாழ்வாதார திசையை நிர்ணயம் செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய நெருக்கடிநிலை வந்த சமயத்தில் ஓடோடி வந்து இறுதிவரை என்னுடன் நின்று எனக்கு வந்த இன்னல்களின் கடைசி முடிச்சு அவிழும்வரை அத்தனை முயற்சிகளையும் செய்து அன்பொழுகும் தன் ஆதரவையும், எனக்கு ஆறுதலையும் கூறி அகமகிழ்வையும் ஏற்படுத்திய நிகழ்வு பக்கத்தில் ஒரு 15 நாட்களுக்கு முன் நடந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல, அந்த இயக்கத்தின் தலைவர் முதல் அத்தனை அங்கத்தினர்களும் மாசற்ற மாணிக்கங்களாக ஒவ்வொரு விதத்திலும் ஒளிர்கிறார்கள் அல்ஹம்திலில்லாஹ்!
தயவுசெய்து இது தனிமனித புகழ் பாடுதல் என்று எடுத்துக்கொள்ளவேண்டாம்.கொத்து,கொத்தாக செத்து மடியும் நமதூர்மக்கள்,அவர்களின் உயிர்கொள்ளிக்கி முக்கிய காரணியாக விளங்கும் ஒரு நச்சுஆலை, அந்த ஆலையை கிட்டத்தட்ட அனைத்து மக்களும் வெறுத்து ஒதுக்கின்ற வேலையில் ஒரு சில ஈனப்பிறவிகள், அவ்வாலை எறியும் எச்சிலை காசுக்காக அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவ தோடில்லாமல் சில அப்பாவிகளையும் அவ்வாலைக்காதரவாய் வளைத்து போடக் கூடியை பேடித்தனமான முறைசியை முறியடித்து அவர்களின் முகத்திரையை கிழித்து ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு பதிலாக,
ஏதோ ஒரு பகைமையை மனதில் வைத்து எக்காலமும் எந்த வேளையிலும் எதிர்க்கவேண்டும் என்று ஒரு எதிரியை தங்கள் பகை உள்ளத்தில் பதுக்கி வைத்திருபவர்கள்,இந்த நச்சு ஆலைக்கு ஆதரவக அடிவருடும் அயோக்கிரகளை தீர்கமாக வெறுத்து ஒதுக்காமல் அவர்களுக்காக வளைந்து நெளிந்து வரடி கொடுத்து வக்காலத்து வாங்கும் எட்டபர்களுக்கு மத்தியில்,
பல புண்ணியமான காரியங்களை மக்களுக்காக செய்யும் கண்ணியவான்களை நான் போற்றுவதில் எந்த தவறும் இல்லை,தனிமனித புகழ் பாடுதலும் இல்லை,இதை எழுதுவதால் என்னிதையம் பெருமை அடைகிறது.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross