செய்தி: புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் கொட்ட ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: வட்டாச்சியர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் நகராட்சி ஆணையர் வாக்குறுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.நீரோட்டம் இல்லாமல் நிலம் விளைவதில்லை போராட்டம் இல்லாமல் நலம் விளைவதில்லை posted bymackie noohuthambi (colombo)[01 October 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41936
பப்பரப் பள்ளி பகுதியில் குப்பை கொட்டும் நிலமை இனிமேலும் நீடிக்காது என்பது தெரிகிறது . ஆனாலும் அரசுக்கு சொந்தமான இடம் என்று எதை சொல்கிறார் நகராட்சி ஆணையர் என்பது தெரியவில்லை.
ஏற்கனவே அரசு biogas திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அந்த வேலைகள் பாதியில் நிற்கிறது. ஏதாவது ஒரு வகையில் ஊருக்கு நன்மைகள் வரும்போது அதை இன்னொரு சாரார் தடுத்து நிறுத்துவது இன்றல்ல,, MKT LK காலத்திலிருந்து நடந்து வருவதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அதே போல் ஒருவர் ஊர் நன்மைக்காக எதிர்க்கும் திட்டத்தை இன்னொரு சாரார் கை நீட்டி வரவேற்கின்றார்கள். என்றாலும் அரசு எப்போதுமே போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால்தான் விழித்துக் கொள்கிறது.
காயல்பட்டினம் மக்கள் கண்ணியமானவர்கள். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க மாட்டார்கள். சாலை மறியல் செய்து பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ய மாட்டார்கள் என்பதை காவல்துறையும் அரசும் தெரிந்தே வைத்திருக்கிறது. உடனடியாக அரசு தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
UNITED WE LIVE DIVIDED WE FALL
உலக நாடுகள் முழுவதும் நாம் பரந்து வாழ்கிறோம் என்ற பெருமை ஊர் வந்தவுடன் முடிந்து விடுகிறது. தெரு முஹல்லா ஜமாஅத் அகீதா என்ற சிறிய வட்டத்துக்குள் நம்மை அடிமைப் படுத்திக் கொள்கிறோம்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் இந்த அடிமை மோகம்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross