செய்தி: கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்! 110 பயனாளிகள் பயன் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[07 October 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41954
இந்த புற்று நோய் பரிசோதனை முகாமை அருமையாக நடத்தித்தந்த கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா ஆகியோருக்கும், நமது KMT மற்றும் திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம், திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், உறுதுணை புரிந்த அனைவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.
அதே தினத்தில் வேறு ஒரு பிரமாண்ட மருத்துவ முகாமும் நம் ஊரில் நடைபெற்றதால், பல பயனாளிகள் இதில் கலந்து கொள்ள முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள்.
வரும் காலத்தில் நேரம் காலத்தை கவனத்தில் கொண்டு முகாமை நடத்துமாறு வேண்டுகிறேன்.
மேலும்,பயனாளிகளை பயமுறுத்தும் வார்த்தைகளை தவிர்க்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.
இரண்டு பெண்மணிகள் பயத்துடன் விவரித்தார்கள்.
அதாவது உங்களுக்கு ...................... இருக்குமோ என்று சந்தேகம் உள்ளது, நீங்க திருச்சிக்கு வாங்க, அங்கு உங்களுக்கு பரிபூரண டெஸ்ட் எடுப்போம், அங்குள்ள சதையை வெட்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவோம் என்று கூறினால் பயம் வராமல் இருக்குமா..?? நாசுக்காக சொல்லலாமே.!!
வல்ல அல்லாஹ் கொடிய நோய்களை விட்டும் நம் அனைவர்களையும் காத்து, நிம்மதியான வாழ்வை தருவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross