கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் 100 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால், எமது கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் ஆகியன, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புடன் இணைந்து, திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம், திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் மூலமாக, புற்றுநோய் பரிசோதனை 8ஆவது இலவச முகாமை, 27.09.2015 ஞாயிற்றுக்கிழமையன்று, நமதூர் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்தின.
முகாம் துவக்க நிகழ்ச்சி, கே.எம்.டீ. மருத்துவமனை கேளரங்கில் நடைபெற்றது. கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் தலைமை தாங்கினார். அதன் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் கோவிந்தராஜன், நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களிடையே - புற்றுநோய் உருவாகும் காரணிகள், அது வருமுன் காப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கி சிற்றுரையாற்றினார்.
கத்தர் காயல் நல மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற செய்மூஸா நன்றி கூறினார்.
பின்னர் துவங்கிய முகாமில், டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் கிருத்திகா ஆகிய - புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று மருந்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினர். காயல்பட்டினத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 62 ஆண்களும், 48 பெண்களும் என மொத்தம் 110 பேர் இம்முகாமில் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
முகாமில் பங்கேற்ற ஓரிருவருக்கு புற்றுநோய்க்கான ஆரம்ப அடையாளங்கள் தென்பட்டதாகவும், எளிய சிகிச்சையில் இலகுவாக அதைச் சரிசெய்துவிடலாம் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
முகாம் ஏற்பாடுகளை, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் செயலாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில், அதன் நிர்வாகி கண்டி ஸிராஜ், கே.எம்.டீ. மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதிகளான எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, எஸ்.அப்துல் வாஹித், கத்தர் காயல் நல மன்ற அங்கத்தினரான வங்காளம் உமர் அனஸ், பி.எம்.ஹுஸைன் ஹல்லாஜ், வி.எம்.டீ.அப்துல்லாஹ், கே.எம்.எஸ்.மீரான், முஹம்மத் இஸ்மாஈல், அனஸுத்தீன், சமூக ஆர்வலர்களான ஊண்டி ஸாலிஹ், பீ.எச்.எம்.இஸ்மாஈல், குடாக் புகாரீ, எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா, ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், கே.எம்.டீ.சுலைமான், சாளை நவாஸ், கத்தர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பெண்கள் பகுதியில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் பெண் தன்னார்வலர்கள் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்திருந்தனர். ‘முர்ஷித் ஜெராக்ஸ்’ கே.முஹ்ஸின், மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் ஏற்பாட்டுப் பணிகளுக்குத் துணை நின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|