வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள, 11.10.2015 அன்று அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
01.01.2016 தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் 2016 நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கு, 14.10.2015 வரை மனுக்கள் பெறப்படும். 01.01.2016இல்; 18 வயது நிறைவடைந்தவர்கள் (01.01.1998க்கு முன்னர் பிறந்தவர்கள்) வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவார்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கான விண்ணப்பப் படிவங்களை - சம்பந்தப்பட்ட பகுதிக்கான வாக்குச்சாவடி மையத்தில், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்படி அலுவலரிடம் வழங்கலாம்.
மேற்படி மையங்களில் 20.09.2015 மற்றும் 04.10.2015 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதற்காக கூடுதலாக 11.10.2015 அன்றும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
எனவே அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 11.10.2015 அன்று காலை 09.30மணி முதல் மாலை 05.30மணி வரை மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படும். பொதுமக்கள் சிறப்பு முகாமைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் செய்வதற்கு மனுக்களை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |