நடப்பாண்டில் (ஹிஜ்ரீ 1436), தமிழ்நாடு ஹஜ் குழுமம் மூலமாகவும், தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலமாகவும், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹஜ் பயணியர், செப்டம்பர் மாத இறுதியில் தமது ஹஜ் கிரியைகளை நிறைவு செய்துள்ளனர்.
பின்னர் அவர்களை, மக்கா மற்றும் ஜித்தா நகரங்களில் பணிபுரியும் காயலர்களான உறவினர்கள் சந்தித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
மக்காவிலிருந்து மதீனா புறப்பட்ட ஹாஜிகள், அங்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளியான மஸ்ஜிதுந் நபவீயில் தொழுகையை நிறைவேற்றி, துஆ பிரார்த்தனை செய்ததோடு, நபிகளார், நபித்தோழர்கள், நபிகளாரின் குடும்பத்தார், இறைநேசர்கள் ஆகியோரது மறைவிடங்களில் ஜியாரத் செய்தனர்.
மதீனாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல ஹாஜிகள் புறப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். இன்னும் பலர் திரும்பவுள்ளனர்.
ஜித்தாவிலிருந்து...
தகவல்:
சட்னி S.A.K.செய்யித் மீரான்
படங்கள்:
மக்கா, ஜித்தா வாழ் காயலர்கள்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின் காயல்பட்டினம் ஹாஜிகள் அங்குள்ள காயலர்களுடன் சந்தித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|