ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில், 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் துபை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் காயலர்கள், அங்குள்ள ஈத்கா திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பங்கேற்றனர்.
பின்னர், அவர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். சொந்த அலுவல் காரணமாக காயல்பட்டினத்திலிருந்து அமீரகம் சென்றுள்ள காயலர்களும் இந்த ஒன்றுகூடலில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
துபை இ.டீ.ஏ. டி-ப்ளாக்கிலும் அன்று காலை 09.00 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தொழுகையை வழிநடத்தி, குத்பா உரையாற்றினார். இதிலும் காயலர்கள் பங்கேற்றனர்.
ஈத்கா திடலில் பெருநாள் தொழுகை நிறைவுற்றதும், கோமான் ஜமாஅத்தைச் சேர்ந்த காயலர்கள், ‘சஊதி ஷேக்’ என்றழைக்கப்படும் அல்லா பிச்சை அறையில் ஒன்றுகூடி, பெருநாள் விருந்துண்டனர்.
காயல்பட்டினம் பாணியில் சமைக்கப்பட்ட கிடா இறைச்சி, கோழி இறைச்சி, வட்டிலியாப்பம், ஜவ்வரிசி, இடியாப்பம், தோசை, புரோட்டா உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் அங்கு பரிமாறப்பட்டது. மறுநாளில், மீன் விருந்தும் பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் சுமார் 120 பேர் கொண்ட நண்பர் குழுவினர் சங்கமித்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
சாளை ஷேக் ஸலீம் (ஈத்கா)
ஸிராஜுத்தீன் (ஈத்கா)
தமீம் அன்ஸாரீ (ஈத்கா & கோமான் ஜமாஅத்)
ஃபஹ்மீ (இ.டீ.ஏ. டி-ப்ளாக்)
துபை காயலர்கள் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |