காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகக் குழுக் கூட்டம், 25.09.2015 வெள்ளிக்கிழமையன்று 19.30 மணியளவில், பைத்துல்மால் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. பைத்துல்மால் அறக்கட்டளை தலைவர் பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், துணைத்தலைவர்களான டூட்டி எம்.எஸ்.எல்.சுஹ்ரவர்த்தி, கத்தீபு எஸ்.ஏ.செய்யித் அஹ்மத், கே.எம்.ஸலீம், துணைச் செயலாளர் எஸ்.ஏ.ஜவாஹிர், அறங்காவலர்களான வி.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, எஸ்.ஏ.சி.முஹம்மத் ஷாஃபிஈ, எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் ஆகியோர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வருமாறு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது:-
இன்ஷாஅல்லாஹ் இனி வருங்காலங்களில், ஆண்டறிக்கையில் பைத்துல்மாலின் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்காக கம்பெனிகள், வியாபார நிறுவங்களிடமிருந்து விளம்பரங்கள் பெறுவது எனவும், அதற்கென கட்டணம் நிர்ணயிக்கவும் தீர்மானிக்கப்படுகிறது.
அறங்காவலர் எம்.எல்.ஷேக்னா லெப்பை துஆ பிரார்த்தனை செய்ய, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்ட ஏற்பாடுகளை எம்.ஏ.சிந்தா மதார் முகைதீன், கே.எம்.சுல்தான் ஜரூக் ஆகியோர் செய்திருந்தனர்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |