இலங்கையில், 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் கொழும்புவில் வசிக்கும் காயலர்கள், அங்குள்ள சம்மாங்கோட் பள்ளி உட்பட - தத்தம் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, காலையில் - கொழும்பு கொள்ளுப்பிட்டியவிலுள்ள புகாரீ அன் கோ நிறுவன இல்லத்தில் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
இலங்கை காயல் நல மன்றம் – காவாலங்கா சார்பில், கொழும்பு புகாரீ அன் கோ இல்லத்தில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், அதன் செயலாளர் பி.எம்.ரஃபீக் மன்றத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக் கூறினார்.
நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். பெருநாள் உணவுண்ட பின் அவர்கள் வசிப்பிடம் திரும்பினர்.
காவாலங்கா சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |