தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் - செப்டம்பர் 29 நிறைவுற்றது. செப்டம்பர் 28 அன்று நடந்த சுற்றுச்சூழல் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், DCW தொழிற்சாலை வாயிலாக காயல்பட்டினம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து பேசினார்.
பல ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தி வரும் DCW தொழிற்சாலைக்கு எதிராக முதல் முறையாக சட்டசபையில் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்து நகரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் - நகரின் ஜும்மா பள்ளிகளில், வெள்ளிக்கிழமை அன்று துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
1. Re:...சொந்தக்காரன் யார்? posted bymackie noohuthambi (colombo)[05 October 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41946
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்,
நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள்
இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்..
உறவுகளாலே வருபவன் அல்ல சொந்தக்காரன்
தன் உயிரைக் கொடுத்தும் காப்பவனேதான் சொந்தக்காரன்.
காதில் பூவை வைப்பவனல்ல சொந்தக்காரன்
காலில் முள்ளை எடுப்பவனேதான் சொந்தக்காரன்
இந்த பாடல் ஒலிக்கும்போது நான் பள்ளி மாணவன். ஆனால் இன்றுதான் அதன் பொருள் விளங்குகிறது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எந்த தொகுதியிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய சகோதரர் காயல்பட்டினதிற்கு கேடுவிளைவிக்கும் ஒரு நச்சாலையை பற்றி சட்டமன்றத்திலே குரல் கொடுக்கிறார்,
ஆனால் காயல்பட்டினத்திலேயே பிறந்து வளர்ந்து அந்த நச்சாலையின் பாதிப்பை நன்கு உணர்ந்தவர்கள் அந்த நச்சாலை அதிபர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து நமதூரில் வரவேற்புக் கொடுத்து திறப்பு விழா நடத்துகிறார்கள். அதிசயமான காயல்பட்டினம்
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏதடா பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள் தானடா.. பேராசிரியர் அவர்களுக்கு அம்மாவின் பாஷையிலே சொல்வதானால் திருவள்ளுவரின் விதி எண் 110 இன் கீழ் கோடான கோடி நன்றிகள்.
2. Re:...கூட இருப்பவன் குழி தோண்டும் இக்காலத்தில் எங்கோஇருப்பவர் எமக்காக குரல் கொடுக்க இறைவன் உதவி செய்திருக்கிறான். posted byOmer Abdul Qadir (Chennai)[05 October 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 41948
தாமதமாக இருந்த போதிலும் ,வரவேற்கத்தக்க செயல்..உண்மையிலேயே காயல் மக்கள் அனைவரும் இச்செயலுக்கு நன்றி கடன் பட்டவர்கள்...கூட இருப்பவன் குழி தோண்டும் இக்காலத்தில் எங்கோஇருப்பவர் எமக்காக குரல் கொடுக்க இறைவன் உதவி செய்திருக்கிறான்.
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[06 October 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41951
அஸ்ஸலாமு அலைக்கும்
பாராட்டபட கூடிய ஒரு செயல் ...ஊர் மக்கள் யாவர்களும் மரியாதைக்குரிய .பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை மறக்காது மனதளைவில் நினைக்க வேணும் ...அன்பு .பேராசிரியர் அவர்களுக்கு ..எங்களின் உள்ளம் கனிந்த ..பாராட்டுக்கள் ......
எங்கிருந்தோ வந்து நம் மக்களுக்காக சட்ட சபையில் பேசிய இவர் எங்கே ??......நம்மோடு ஊரில் ஒன்றாக இணைந்து இருக்க கூடிய நம் மரியாதைக்குரிய >> DCW << கைபாவை மோசகர ஒரு சில உறுப்பினர்கள் எங்கே ??
நினைத்து பார்க்கவே நம் யாவர்களின் மன கூசுகிறது ....நம் உயிரை ...DCW இடம் விலை பேசுகின்ற ...கயவர்கலையா நாம் தேர்வு செய்தோம் .....என்று மனம் வேதனை படுகிறது .........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross