DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் அக்டோபர் 5 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி
தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கில், அனைத்து தரப்பின்
எழுத்துப்பூர்வமான வாதங்கள் (PLEADINGS) சமர்ப்பிப்பு - செப்டம்பர் 3, 2015 அன்று நிறைவுற்றது.
இதனை தொடர்ந்து - இவ்வழக்கில் வாதங்கள் (SUBMISSIONS) - அக்டோபர் 5 அன்று துவங்கின. அன்று - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர் டி.நாகசைலா, தனது வாதங்களை துவக்கினார்.
வழக்கறிஞர் டி.நாகசைலா - தனது துவக்க வாதங்களில் ---
<><><> DCW தொழிற்சாலையின் ஆரம்ப கால முதலான செயல்பாடுகள்
<><><> ஒரு சிறு பகுதியில் எவ்வாறு பல தொழிற்சாலைகளை அந்நிறுவனம் படிப்படியாக கொண்டு வந்தது
<><><> ஆரம்ப காலங்கள் முதல் அத்தொழிற்சாலை ஏற்படுத்தி வரும் மாசு
<><><> தொழிற்சாலையும், அரசு துறைகளும் - சுற்றுச்சூழல் மற்றும் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எவ்வாறு அலட்சியம் செய்து
வந்துள்ளன
<><><> காயல்பட்டினம் நகரில் அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ள புற்று நோய் குறித்து DCW தொழிற்சாலையின்
விமர்சனம்
<><><> DCW தொழிற்சாலையின் வரலாற்றினை கணக்கில் கொள்ளாமல், விரிவாக்க திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள செயல்
<><><> அனுமதி பெறுவதற்கு விண்ணப்பம் செய்த DCW தொழிற்சாலை - விண்ணப்பத்தில், மறைத்த மற்றும் வழங்கிய தவறான தகவல்கள்
விபரம்
<><><> எவ்வாறு தகுதி இல்லாத நிறுவனங்கள் உதவிக்கொண்டு முழுமை பெறாத ENVIRONMENTAL IMPACT ASSESSMENT (EIA) ஆவணம் தயார்
செய்யப்பட்டுள்ளது
உட்பட பல வாதங்களை சுருக்கமாக முன் வைத்தார்.
இவைகள் குறித்தும், இன்னும் பல விஷயங்கள் குறித்தும், தனது அடுத்தடுத்த வாதங்களில் - ஆவணங்களின் உதவியோடு, விரிவாக எடுத்துரைக்க
உள்ளதாகவும், வழக்கறிஞர் டி.நாகசைலா - தனது வாதங்களின் போது தெரிவித்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பி.எஸ். ராவ் ஆகியோர் - வழக்கினை, அக்டோபர் 10 தேதிக்கு
ஒத்திவைத்தனர். அக்டோபர் 10 அன்று, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் வழக்கறிஞர் டி.நாகசைலா தனது வாதங்களை
தொடருவார்.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி
மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம்
மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு,
CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11:00 / 7.10.2015] |