சீனாவில், 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
தென்சீனாவின் குவாங்ஜோ நகரில், நபித்தோழர் அபீவக்காஸ் பள்ளிவாசலில் அன்று காலை 08.00 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பன்னாட்டு முஸ்லிம்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இத்தொழுகைகளில், காயல்பட்டினம் - கீழக்கரை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவுற்றதும், காயலர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
தென்சீனாவிலிருந்து...
V.D.சதக்கு தம்பி
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ஹஜ் பெருநாளின்போது, தென்சீனா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|