சஊதி அரபிய்யா ரியாத் நகரில் வசிக்கும் காயலர்கள், ஹஜ் பெருநாளை முன்னிட்டு இன்பச் சிற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட நிகழ்வறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
ஹஜ்ஜீப்பெருநாள் பயண விபரம்.
பயணம் செய்தவர்கள்.
1.Dr.செய்யிது இப்ராஹீம்(குழந்தை நல மருத்துவ) சாக்ரா 2.மீரான் நெய்னா(ராவன்னா ஹாஜியார்) ரியாத்
3.சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யத்தீன்-ரியாத் 4.ஹாபிழ் .ஹபீப் முஹம்மது சாதிக்.ரியாத் 5.முஹம்மது ரியாஸ்.ரியாத்
பயணத்தொகுப்பு,
22.09.2015 செவ்வாய் பின்னேரம் சுமார் 5 மணி.
இடம்: பத்தாஹ். ரியாத்
பயண தூரம் சுமார் 830 Km. மதீனத்துல் முனவ்வரா.
போகும் வழியில் மஃரிப்,இஷா தொழுகை மற்றும் இரவு உணவு.
சுமார் 3.00Am மதீனாவை அடைந்தோம்.
அரபா நோன்புக்கான சஹர் சாப்பாட்டை முடித்து விட்டு எடுத்த ரூமில் பேக்குகளை வைத்துவிட்டு ரவ்ழா ஷரீப் சென்று தொழுகை கிரியைகளை புணித மிகு ஸ்தலத்தில் தொடர்ந்தோம்.பின்பு ஜியாரத் முடிந்தவரை கண்மணி நாயகத்தின் ரவ்ழா ஷரீப் எதிரிலும் பள்ளியிலும் கழித்தோம்.
ஹரமிலேயே மிகப்பெரிய அளவில் இப்தார் நடைபெற்றது.கலந்து கொண்டோம். அதிக நேரம் ஹரத்திலேயே செலவு செய்தோம்.
24.09.2015 ஹஜ்ஜீப்பெருநாள்
மஸ்ஜிதுல் ஹரத்திலேயே தொழுது கொண்டாடினோம். பின்பு நம் ஊர் மக்களையும் சந்தித்தோம்.ஆலிங்கணம் செய்துகொடோம்.
அங்கிருந்து 30Km தொலைவில் இருக்கின்ற "தரீக்குல் ஜின்" சென்றோம்.ஆச்சரியமாக இருந்தது. பின்பு மதினாவில் Dr.அவர்களின் ஆலோசனையின் பேரில் ஆப்பில் Restaurant ல் அசத்தலான பெருநாள் உணவை Order செய்து ரூமில் வந்து ஒரு கட்டு கட்டினோம்.Spl.பிரியாணி.Mixed grill.salad.fresh juices.soft drinks ஆக பெருநாள் உணவு அமைந்தது.மீண்டும் ஜன்னத்துல் ஃபக்கீ,மஸ்ஜிதில் ஹரம் என்று தொடர்ந்தது...
யான்பு காயல்ஹவுஸில் தொழுகைகளை முடித்துவிட்டு அபூபக்கர் தந்த காயல் இஞ்சி சாயாவை அருந்திவிட்டு சகோ.NT.செய்ஹீ சுலைமான் அவர்களுடன் நம் மக்களின் ஸ்தாபனங்களுக்கு சென்று சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டோம்.சகோ ZA.சுல்த்தான் லெப்பை,மொஹ்தூம் காக்கா,அப்துர் ரஹ்மான்.,ஜெஃபர்சாதிக்,சாதிக்.சல்மான் ஃபாரிஸ், இஜ்ஜத்தீன் மற்றும் நம் நண்பர்களை சந்தித்தோம்.பின்பு கடற்கரை ஏரியாக்களுக்குச் சென்று இளைப்பாறினோம்.
இரவு 11 மணிக்கு மேல் அங்கிருந்து NTS..ZAS,அவர்கள் அளித்த அரபிய உணவுகளை உட்கொண்டோம்.இவர்களின் அறைகளிலேயே தங்கிவிட்டு,காலையில் NTS தந்த காலை உணவை சாப்பிட்டுவிட்டு அனைத்து சகோதரர்களிம் இருந்து விடை பெற்று விட்டு பத்ரு போர் சஹாபாக்களின் மக்பரா நோக்கி எங்கள் பயணம் அமைந்தது. சுமார் 11Am அளவில் பத்ரை அடைந்தோம்.அங்கு ஜியாரத் செய்து விட்டு கண்மணி நாயகம் தொழுது போரில் வெற்றி பெற துஆ செய்த மஸ்ஜீதுல் ஹரீஸில் சுன்னத்,லுஹர்,தொழுது துஆ செய்து விட்டு புரைதா நோக்கி பயணம் நகர்ந்தது.
தொடர்ந்து அஙகிருந்து புரைதா சென்று அடைந்தோம்.மஃரிப்,இஷாஃ தொழுதுவிட்டு நம் சகோதரர் NT.முஹம்மது ஜமால் அவர்களின் கடைக்குச்சென்று அவரையும் மகன் JM.முஹம்மது மன்சூரையும் சந்தித்து ஆலிங்கணம் செய்து விட்டு சூடான உளுந்தவடை.,சாயாவையும் அருந்தி விட்டு பிரியாவிடை பெற்று அடுத்து உனைஷா சென்று மற்றும் ஒரு சகோதரர் முஹம்மது அப்துல் காதர் அவர்களை சந்தித்துவிட்டு இரவு உணவை Sawaaya விலே சாப்பிட்டுவிட்டு சாக்ரா சென்று தங்கி விட்டு காலை 5.45 மணியளவில் புறப்பட்டு சுமார் 8 மணியளவில் ரியாத் வந்து சேர்ந்தோம்.
முக்கியம் பயணம் சிறப்பாக அமைய பேருபகாரம் செய்த அல்லாஹீக்கு மூதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.,
குறிப்பாக இந்த பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு இறைவனுக்கு அடுத்து உங்கள் பயண துஆக்களுடன் எங்களின் பைலட் ஜனாப் ஹாபிழ் ஹபீப் முஹம்மது சாதிக் அவர்களுக்கு மிகுந்த நன்றி.சிறப்பாகவும் அழகான திட்ட மிடலுடனும் செயல்பட்டார்.
சிறந்த போட்டோ கிராபராக ராவண்ணா ஹாஜியார் (மீரா நெய்னா) அவர்கள்.சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.
கணக்கு வழக்குகளை தம்பி முஹம்மது. ரியாஜீம்,இறுதி வறை இந்த பயணம் களைப்பு இல்லாமல் இருக்க Dr.செய்யிது இப்றாஹீம் அவர்களின் நகைச்சுவையுடனும் இந்த பயணம் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்
இந்த பெருநாள் இன்பச் சுற்றுலாவின் படங்கள் அனைத்தையும் https://onedrive.live.com/redir.aspx?cid=730ac9acfc9ce261&resid=730AC9ACFC9CE261!286&parId=730AC9ACFC9CE261!117&authkey=!AEda5cPy9kzUiKk&ithint=folder%2cjpg என்ற இணையதள பக்க இணைப்பில் சொடுக்கி, தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த நிகழ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி தொகுப்பு & படங்கள்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன்
தொகுப்புப் படங்கள்:
மீரான் நெய்னா (ராவன்னா) |