உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி நகரில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கருதப்பட்டு, முதியவரை அடித்துப் படுகொலை செய்தவர்கள், தூத்துக்குடி கடலில் மீன் பிடிக்கச் சென்ற 7 பேரைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், உத்தரபிரதேசத்தில் கோவிலுக்குள் வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட முதியவரை தீ வைத்து எரித்துக் கொலை செய்தவர்களைக் கண்டித்தும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், 08.10.2015 வியாழக்கிழமையன்று 19.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு. தமிழப்பன் தலைமையுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் சிபா. பாரி வள்ளல், மீனவர் மேம்பாட்டுப் பேராயத்தின் மாவட்ட அமைப்பாளர் அருளானந்தம், அதன் துணை அமைப்பாளர் அருள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் அம்பேத் வரவேற்புரையாற்றினார். கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கருத்துரையாற்றினர். ஒன்றிய துணைச் செயலாளர் மு.தமிழ்ப்பரிதி நன்றி கூறினார்.
மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் சா.சு.இந்திரா, உழவர் இயக்க மாவட்ட அமைப்பாளர் இல.பேச்சிமுத்து, வணிகரணி மாவட்ட அமைப்பாளர் திருவள்ளுவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூலான் பாண்டியன், ஊடக மைய அமைப்பாளர் க.வேம்படிமுத்து, கானாம்பர் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் அறிவை நந்தா, காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் பவுல் என்ற பகவலன், இளஞ்சிறுத்தை நகர துணை அமைப்பாளர்களான முத்துராமன், வன செல்வன், சாரதி, ஆறுமுகநேரி நகர செயலாளர் வெள்ளத்துரை, தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கிருஷ்ணவேல், தொண்டரணி அமைப்பாளர் ராஜா, வணிகரணி துணை அமைப்பாளர் இளமாறன், உடன்குடி ஒன்றிய துணைச் செயலாளர் ஜான் வளவன், உடன்குடி ஒன்றிய இளஞ்சிறுத்தை துணை அமைப்பாளர் பன்னீர்வளவன், ஆழ்வை நகர செயலாளர் மாணிக்கம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்குட்டி, தொழிலாளர் விடுதலை முன்னணி துணை அமைப்பாளர் குட்டி என்ற வெற்றிவேந்தன், இளஞ்சிறுத்தைகள் துணை அமைப்பாளர் அந்தோணி ராவணன் உள்ளிட்ட கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 3:10 / 11-10-2015] |