காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர்கள், கேரள மாநிலத்திற்கு இன்பச் சுற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து, அப்பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இறையருளால் எமது முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி பயிற்றுவிக்கப்படுவதோடு மட்டுமின்றி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான இன்பச் சுற்றுலாவுக்கும் தொடர்ந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு ஆர்வமூட்டப்படுகிறது.
நடப்பாண்டின் இன்பச் சுற்றுலா 30.09.2015 அன்று துவங்கியது. அன்று இரவு காயல்பட்டினத்திலிருந்து புறப்பட்ட சுற்றுலாக் குழுவினர் 01.10.2015 அன்று ஸுப்ஹு தொழுகையை, கேரளாவிலுள்ள ஒரு பள்ளியில் தொழுதுவிட்டு, கொச்சி நகரிலுள்ள Wonderla தீம் பார்க்கில், குளித்தும் - குதூகலித்தும் பொழுதுபோக்கினர்.
02.10.2015 அன்று, கொச்சியிலுள்ள துறைமுகம், அருங்காட்சியகம், லூலூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களைக் கண்டுகளித்ததோடு, படகுச் சவாரியும் செய்தனர்.
03.10.2015 அன்று கொச்சியிலிருந்து புறப்பட்டு, மூனாறு சென்று, அங்குள்ள ரோஸ் பூங்கா, மாடுபெட்டி நீர்த்தேக்கம், Eco Point, தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட இடங்களைக் கண்டுகளித்தனர்.
அன்றிரவு மூனாறில் தங்கிவிட்டு, மறுநாள் 04.10.2015 அன்று தேக்கடி வரும் வழியில், இயற்கைக் காட்சிகளை ரசித்தனர். 05.10.2015 அதிகாலையில் அனைவரும் காயல்பட்டினம் திரும்பினர்.
இச்சுற்றுலாவில் 44 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களை, பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் தலைமையில், தலைமையாசிரியர் ஸ்டீஃபன், ஆசிரியர்கள் ஆஸாத் ஜவஹர், முஹம்மத் அலீ உள்ளிட்ட பொறுப்புக் குழுவினர் வழிநடத்தினர்.
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி சார்பில் கடந்தாண்டு நடைபெற்ற இன்பச் சுற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |