தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதிக்கு மாற்றமாக காயல்பட்டினத்தில் பயோகேஸ் திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக குப்பை கொட்டுவதற்கு அங்கு இடமில்லாமலாகிவிடும் என்றும், இந்நிலையை ஏற்படுத்திய காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவும், நடைமுறை சாத்தியமின்றி தவறான முறையில் வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரியும், ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பாக, 31.08.2015 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கப்பட்டிருந்தது.
ஒரு மாதமாகியும், அம்மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், விரைவான நடவடிக்கை கோரியும், நடவடிக்கை இல்லாவிடில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும், 05.10.2015 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியரிடம் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் அளிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை என்றும், கள ஆய்வு மூலம் அதை உறுதி செய்யுமாறும், 12.10.2015 திங்கட்கிழமையன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 05ஆவது வார்டு உறுப்பினர் ம.ஜஹாங்கீர் பின்வருமாறு மனு அளித்துள்ளார்:-
தகவலில் உதவி:
M.M.முஜாஹித் அலீ |