காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், அக்டோபர் 12 திங்கள்கிழமை காலை 11:00 மணியளவில் நடைபெறும் என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பதிவில் தகவல் வழங்கியுள்ள நகர்மன்றத் தலைவர், இக்கூட்டத்தில் 93 பொருட்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
93 பொருட்களில் - செப்டம்பர் மாதம் கூட்டத்தில் இடம்பெற்று ஒத்திவைக்கப்பட்ட பொருள்களான, 2015-16 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சாலை, மழை நீர் வடிகால், இரண்டாம் குடிநீர் திட்டத்தில் விடுப்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்க நிதி ஒதுக்குதல், கல்வி, மருத்துவம், சமுதாய கூடங்கள், நகராட்சி வரவுக்கு புதிய கட்டிடங்கள்/கடைகள், உயர் நிலை குடிநீர் தொட்டிகளை மேம்படுத்தல், அரசு/நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மயான ஸ்தலங்களை புனரமைத்தல், CCTV கேமரா பொறுத்த நிதி ஒதுக்குதல், BIO - METRIC ATTENDANCE, நகராட்சி வாகனங்களில் GPS கருவி பொருத்துதல் வகைக்கு நிதி ஒதுக்குதல் உட்பட பல பணிகளுக்கு நிதி ஒதுக்குவது,
நகர்மன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட புதிய சாலைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கும்.
நகர்மன்றத் தலைவரின் முகநூல் பதிவு வருமாறு:
வடக்கிழக்கு பருவமழை துவங்க உள்ள சூழலில், எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய, அக்டோபர் 6
அன்று நகர்மன்றத்தின் அவசர கூட்டம் ஏற்பாடு செய்ய ஆணையருக்கு - அக்டோபர் 2 அன்று ஈமெயில் அனுப்பினேன்.
சாதாரண கூட்டத்தினை நடத்தி, அக்கூட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொருள் வைக்கலாம் என எனக்கு அக்டோபர் 5 அன்று ஆணையர் பதில் அனுப்பினார்.
அக்டோபர் 6 அன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு ஈமெயில் அனுப்பினேன். அதில் - ஒத்தி வைக்கப்பட்ட செப்டம்பர் மாத கூட்டப்
பொருட்கள் 92வுடன், பருவ மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் குறித்த பொருளையும் சேர்த்து - 93 பொருள்களை
கொண்டு அஜெண்டா தயார் செய்ய கூறினேன். அவ்வாறு தயார் செய்யப்பட்ட அஜெண்டாவினை - அக்டோபர் 12 அன்று கூட்டம் நடத்திட, அக்டோபர்
7 க்குள் உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யும்படி கூறியிருந்தேன்.
ஆணையர் அஜெண்டா தயார் செய்து தராத காரணத்தால், உறுப்பினர்கள் அனைவருக்கும், பதிவு தபால் மூலம் - அக்டோபர் மாத அஜெண்டாவினை,
கடந்த மாதம் போல - அக்டோபர் 8 அன்று - நேரடியாக அனுப்பியுள்ளேன்.
கூட்டம் நாள்: அக்டோபர் 12 காலை 11 மணி
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|