காயல்பட்டினத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர், வயிற்றுப் பிரச்சினை காரணமாக கே.எம்.டீ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதித்ததில், அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
06.10.2015 செவ்வாய்க்கிழமையன்று, கே.எம்.டீ. மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மல்லிகா அறுவை சிகிச்சை செய்து, 3.5 கிலோ எடையுள்ள கட்டியை அவரது வயிற்றிலிருந்து அகற்றினார்.
தற்போது அப்பெண் நலமுடன் உள்ளதாகவும், மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1. மருத்துவ குழுவிற்கு வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[11 October 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41964
அறுவை சிகச்சை செய்யப்பட்ட சகோதிரி சரீர நலமுடன் வாழ வல்ல இறைவனிடம் பிராத்திப்போமாக ஆமீன் - அறுவை சிகச்சையை மிக சாதுரியமாக நல்ல படி வயற்றிலிருந்து 3.5 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவ குழுவிற்கு வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்..!
இது போன்று பல அறுவை சிகச்சைகளை மிக சாதுரியமாக இம்மருத்துவனையில் மேற்கொண்டு நகர் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு..
3. Re:... posted byM. A. S. Ayoob (Salalah - Oman)[11 October 2015] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 41966
All praise to The Almighty.. Good work by the Surgeons.. Hope the patient is recovering well son In'Sha Allah.. Best wishes to KMT Hospital and team...
4. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[11 October 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41968
அஸ்ஸலாமு அலைக்கும்
அறுவை சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருக்கும் நம் அருமை சகோதரி அவர்கள் ....பரிபூர்னமான உடல் நலத்துடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.......ஆமீன் .....
அறுவை சிகிச்சை பெற்ற சகோதரி அவர்களின் பெயரை வெளியிடாமல் மிக கண்ணியமுடன் செய்தியை தந்த நம் இணைய தளத்தை '' பாராட்டுகிறோம் ........
நமது ஊரின் ...KMT ....மருத்துவமனையின் இது போன்ற சிறப்பு செய்திகளை தாங்கள் வெளிட்டு .....KMT மருத்துவமனை பெயரை ஊர் அனைத்து பொது மக்கள் மத்தியில் சிறப்படைய வேணும் ......
நம் >> KMT << யில் நல்ல திறைமையான மருத்துவ வசதிகள் & நல்ல திறமையான மருத்துவர்கள் இருப்பின் ...நம் ஊர் மக்கள் ஒரு சிலர் ,, ஒரு சில தேவையான மருத்துவத்துக்கு இங்கு போகாமல் ...வெளியூர் & பக்கத்தில் உள்ள இடத்துக்கு போவது தான் ... நமக்கு மன வருத்தத்தை தருகிறது .......
நம் ஊரின் பொது அமைப்பான >> KMT << மருத்துவமனையை நம் ஒவ்வொருவர்களும் சேர்ந்து தான் முன்னுக்கு கொண்டு வர வேணும் ....அதை மனதில் யாவர்களும் கொண்டாள் நல்லது .....
நல்ல திறமையான மருத்துவமும் + மருத்துவத்தின் செலவும் பணமும் குறைவே ....
6. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[11 October 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41970
ஊரில் இருந்த சமயம், நம் KMT க்கு பலமுறை சென்று இருந்தேன்.
வழமை போல இல்லாமல், மருத்துவமனை வளாகம் வாகனங்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் என பரபரப்புடன் காணப்பட்டது. அதிக குழந்தை பிறப்பு என்று வார்டுகள் முழுமை அடைந்து இருந்தது.
விசாரித்ததில் திறைமை, அனுபவம் மற்றும் நல்ல குணமுள்ள மகப்பேறு மருத்துவர் மல்லிகா அவர்கள் இங்கு பணிபுரிகின்றார்கள் என்று அறிய முடிந்தது.
மிக்க மகிழ்ச்சி. இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் அறிய முடிந்தததை நிருபிப்பதாக உள்ளது. பாராட்டுக்கள்.
நம் KMT நிர்வாகத்திற்கும், மருத்துவ குழுவிற்கும் கூடுதல் பாராட்டுக்கள்.
7. Re:...பாராட்டுகள் posted byK.M.T.SULAIMAN (KAYALPATNAM)[11 October 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41971
சகோதரி பூரண குனமடைய வாழ்த்துக்கள். மருத்துவ குழுவிற்கு
பாராட்டுக்கள். டாக்டருகள் மற்றும் நர்சுகள் மிக பனிவுடன் நடந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். KMT மென்மேலும் வளரும்
8. Re:...A SMALL STEP FORWARD BUT A GREAT LEAP FOR MANKIND posted bymackie noohuthambi (colombo)[11 October 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41974
A SMALL STEP FORWARD BUT A GREAT LEAP FOR MANKIND.
நிலவில் முதல் முறையாக தடம் பதித்தபோது யூரி ககாரின் என்ற விண்வெளி வீரர் உதிர்த்த முத்துக்கள் மேலே சொன்ன எழுத்துக்கள்
KMT மருத்துவமனை வெள்ளி விழாவை எட்டி மாதங்கள் எட்டு ஓடிவிட்டன அதன் சாதனைகள் ஒரு மௌன புரட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மருத்துவமனை அரசு உதவிகள் இல்லாமல் ஊர் மக்களின் நல்லாதரவுடன் 25 வருடங்களை கடந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. முறையாக பார்த்தால் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த மருத்துவமனையின் வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
அடுத்தவர்கள் குறைகளையே ஆராய்ச்சி செய்து பழக்கப்பட்ட நமக்கு இந்த மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை ஊதி பெரிதாக்கி பூதக் கண்ணாடி போட்டு பார்ப்பதால் அதன் மகத்துவம் தெரிவதில்லை. வரவேற்பறையில் காத்திருப்பது முதல் குறிப்பிட்ட மருத்துவர் வருகை தவறி விடுவது வரை நமக்கு எல்லாமே குறையாக தெரிகிறது. ஆனால் இதே குறைகளை நாம் வெளியூரில் மருத்துவமனைகளில் எதிர்கொள்ளும்போது அதை சகித்துக் கொள்கிறோம்.
''நான்'' ''எனது'' என்ற எண்ணத்தை மாற்றி ''நாம்'' ''நமது'' என்று நம் சிந்தனைகளை ஓட விட்டால் இந்த மருத்துவமனைக்கு நாம் செய்ய வேண்டிய பங்களிப்புக்கள் ஏராளம் உள்ளன.
தன்னலமில்லா சேவைகள் செய்யும் இந்த மருத்துவமனை நிர்வாகிகளுக்கு அல்லாஹ் நீடித்த ஆயுளையும் குன்றாத செல்வதையும் திடமான உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்தருள் புரிவானாக.
3.5 கிலோ கட்டியை மிக சிறப்பாக அகற்றி அந்த பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் து ஆக்களையும் காணிக்கையாக்குகிறோம்.
கட்டி அகற்றப்பட்ட பெண்மணி நலமோடு வாழவும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி இந்த மருத்துவமனை சிறப்பாக இயங்கிட பிரார்த்தனையும் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
9. வாழ்த்துக்கள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[11 October 2015] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 41975
பல வேளைகளில் கண்ணியம் காக்கும் காயல்பட்டணம் .காமின் மற்றுமொரு மேன்மை வெளிறும் வெளிப்பாடுதான் அந்த அறுவைசிக்கை பெற்ற சகோதரியின் பெயரை வெளியிடாதது. வல்ல அல்லாஹ் அந்த சகோதரிக்கு பூரண சுகத்தை சொரிந்தருல்வானாக!
அடுத்து,என் உள்ளத்தில் உள்ள உணர்வை வெளிப்படியாக எழுதுகிறேன், அந்த கட்டியின் புகைப்படக்காட்சியை பார்க்கும்பொழுது ஒரு பயம் கலந்த அருவறுப்பாகத்தான் தோன்றியது.உண்மையில் அதை பார்க்கவே தைரியம் இல்லை,அதை பிரசுரிக்காமல் தவிர்த்திருக்கலாமே என்ற ஒரு எண்ண நெருடல் என்னுள் அலைமோதியது!
திறமையாக வெற்றியுடன் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்த மருத்துவ சகோதரிக்கும், KMT நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள்!
KMT யைப்பொருத்தவரை இதுபோன்ற திறமைமிகு மருத்துவ குழு இருப்பார்களேயானால் மற்றைய ஊர்களை நாடிப் போகும் நமதூர் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. KMT நிர்வாகம் நல்ல திறமைமிகு மருத்துவர்களை பணியமர்த்துவதோடு சிகிச்சை நாடி வரும் நோயாளிகளின் மனம் கோணா செயல்பாடுகளுடைய நிர்வாகமாக பொறுப்புடன் செயல்படுமேயானால் எல்லோர்களுடைய ஏகோபித்த ஆதரவை எந்நாளும் பெற்றிடலாம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
10. Re:... posted byvilack sma (jeddah)[12 October 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 41987
[
அடுத்தவர்கள் குறைகளையே ஆராய்ச்சி செய்து பழக்கப்பட்ட நமக்கு இந்த மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை ஊதி பெரிதாக்கி பூதக் கண்ணாடி போட்டு பார்ப்பதால் அதன் மகத்துவம் தெரிவதில்லை. வரவேற்பறையில் காத்திருப்பது முதல் குறிப்பிட்ட மருத்துவர் வருகை தவறி விடுவது வரை நமக்கு எல்லாமே குறையாக தெரிகிறது. ஆனால் இதே குறைகளை நாம் வெளியூரில் மருத்துவமனைகளில் எதிர்கொள்ளும்போது அதை சகித்துக் கொள்கிறோம். ] c & p
முற்றிலும் உண்மை . மேலும் பில்லில் சிறிய , பெரிய அளவிலான தள்ளுபடியோ அல்லது சுகமாகி வீடு திரும்பியதும் சாவகாசமாக வந்து பில்லுக்கான பணத்தை கட்டும் வசதியோ வேறு எங்காவது உண்டா ? நெல்லையில் உள்ள மருத்துவர்கள்கூட ஒருசில டெஸ்டுகளுக்கு உங்கள் ஊரிலுள்ள KMT யிலேயே பாருங்களேன் என்றுதான் சிபாரிசு செய்கின்றனர் . இதைவிட வேறு என்ன வேண்டும் !
[ KMT யைப்பொருத்தவரை இதுபோன்ற திறமைமிகு மருத்துவ குழு இருப்பார்களேயானால் மற்றைய ஊர்களை நாடிப் போகும் நமதூர் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. KMT நிர்வாகம் நல்ல திறமைமிகு மருத்துவர்களை பணியமர்த்துவதோடு சிகிச்சை நாடி வரும் நோயாளிகளின் மனம் கோணா செயல்பாடுகளுடைய நிர்வாகமாக பொறுப்புடன் செயல்படுமேயானால் எல்லோர்களுடைய ஏகோபித்த ஆதரவை எந்நாளும் பெற்றிடலாம்! ] c & ப
KMT இல் அன்றுமுதல் இன்றுவரை , பல மருத்துவர்கள் மாறிச்சென்றாலும் அனைவரும் திறமையானவர்களே . மருத்துவர்கள் அடிக்கடி மாறுவதற்கான காரணம் ஊரின் பிளவுபட்ட கோஸ்டிகளே . அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து KMT க்கு ஆதரவு கொடுத்திருந்தால் ஊரின் பெரும்பாலான பிரசவ கேஸ்களும் , சிறிய அளவிலான ஆபரேசன்களும் இங்குதான் நடந்திருக்கும் . ஒரு மருத்துவர் நிலைத்திருப்பது என்பது அங்கு வரும் கூட்டத்தை பொருத்தது . கூட்டம் அதிகம் வந்தால்தான் மருத்துவரும் ப்ராக்டீஸ் பண்ண தோதுவாக இருக்கும் .கூட்டம் குறைவான இடத்தில் யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் .
ஆக , KMT யையோ , திறமையற்ற மருத்துவர்கள் இல்லையென்றோ குறை காண வேண்டாம் . பிளவுபட்ட கோஷ்டிகளை ஒன்று சேர்க்க பாருங்கள் . இந்த மருத்துவமனை இன்னும் சூப்பராக வரும் .
அறுவை சிகிச்சை செய்துகொண்ட சகோதரி நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர் என்று கேள்விப்பட்டேன் . ஒருவேளை அவர் இந்த சிகிச்சையை வேறு எங்காவது செய்திருந்தால் அது அவர்களது சக்திக்கு மீறியதாக இருந்திருக்கும் . அல்லாஹ் காப்பாற்றினான் .
11. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன் posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[13 October 2015] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 42001
அடுத்தவர்கள் குறைகளையே ஆராய்ச்சி செய்து பழக்கப்பட்ட நமக்கு இந்த மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை ஊதி பெரிதாக்கி, நமக்கு எல்லாமே குறையாக தெரிகிறது. வெளியூரில் மருத்துவமனைகளில் எதிர்கொள்ளும்போது அதை சகித்துக் கொள்கிறோம். (c & p )
KMT யையோ, திறமையற்ற மருத்துவர்கள் இல்லையென்றோ குறை காண வேண்டாம் பிளவுபட்ட கோஷ்டிகளை ஒன்று சேர்க்க பாருங்கள் . இந்த மருத்துவமனை இன்னும் சூப்பராக வரும்(C& P) .
மருத்துவர்கள் மாறி,மாறி செல்வதற்கு ஊரின் ஒன்றுபட்ட தன்மை இல்லை. பிளவுபட்ட கோஷ்டிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இரு கோஷ்டிகள் என்றால் எதை குறிப்பிடபடுகிறது என்று எனக்கு விளங்கவில்லை.
வெளியூரில் தாமதத்தை பொறுத்துக்கொள்கிறோம் இங்கே ஏன் கோபப்படுகிறோம், அதை பெரிதுபடுத்துகிறோம் என்பதும் ஒரு கருத்து பதிவாகி இருக்கிறது.
வெளியூரில் தாமதத்தைப்பொருத்துதான் ஆகணும்,
அதே நேரத்தில் வெளியூரில் ஏற்படும் இன்னல்களை விமர்சித்ததுதான் வருகிறோம், சில வேளைகளில் அந்த நிர்வாத்திற்கு நெருக்கமானவர்கள் நண்பர்களாக இருந்தால் அந்த தவறுகள் சுட்டிக்காட்டத்தான் படுகிறது!
அதே வேலையில் வெளியூர் போல் உள்ளூரிலும் இருங்கள் என்பது எந்த சித்தாந்தம் என்பது எனக்கு விளங்கவில்லை. KMT ஆரம்பம் ஆகும்பொழுது இது காயல் மக்களுக்காக, மக்களுடைய, மக்களின் மருத்துவமனை என்று கூறப்பட்டது. அப்படிப்பட்ட உரிமையுள்ள நமக்கு, ஒரு சில தவறுகளை சுட்டிக் காட்டுவதென்பது எந்த வகையில் குற்றமாகும்!
குறைகள் களைய உங்களது உயரிய யோசனையை பகிர்ந்தளித்து ஒத்துழைப்பதே சாலசிறந்தது. அதை தவிர்த்து உண்மையான குறைகள் கூறுபவர்களை குதறுவதும் அதுதான் அவர்களின் அன்றாட ஆராய்ச்சி போலவும் விமர்சிப்பது விரும்பத்தக்க குணமாக எனக்கு தெரியவில்லை!
இந்த KMT ஆரம்பமாவதற்கு முன்பிலிருந்தே என்னைப் போன்றவர்கள் எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்தோம் என்பதை அந்த நிர்வாகத்தின் மூத்த தலைவர்களாகிய கண்ணியவான்களிடம் கேட்டால் கடுகளவும் பிசகாமல் புட்டு, புட்டு வைப்பார்கள் உண்மையின் வெளிப்பாடுகளை!
ஆகவே,அன்பு காயல் சகோதரர்களே,நமக்குரிய KMT
மருத்துமையை நாம் பெருவாரியாக ஒத்துழைத்தால்தான் ஓரளவு நஷ்டமின்றி நடைபெற வாய்ப்புள்ளது. அதே நேரம் நிர்வாகமும் அவ்வவப்போது ஏற்படுகின்ற சில, சில தவறுகளை சீர்செய்து, முழு ஒத்துழைப்பையும், முகமலர்ச்சியுடைய வரவேற்ப்பு அரவணைப்பையும் கொடுப்பார்களேயானால் , எந்த ஒரு பெரிய குறைபாடும் மிகச்சிறியதாய் சகித்துக்கொள்ளகூடிய மனநிலைக்கு கொண்டு சென்று விடும். பரிசித்து பார்த்தால் பலன் நிச்சியம் கிடைக்கும் படைத்தோன் உதவியால்.
12. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[14 October 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42007
அட்மின் அவர்களே, இது இங்கு பதிவு செய்ய தேவை இல்லை என்றால் பதிவு செய்ய வேண்டாம் .
நான் முகநூலில் ( facebook ) முன்பு பதிந்தத கட்டுரை.
==============================================
காட்சிகள் 2- கதாநாயகன் -1
சகோதரர் ஒருவர் (2 காட்சிகளின் கதாநாயகன்) அதிக கோபக்காரர், தன்னுடைய குடும்பத்தில் பெரியவர் ஒருவர் சுகர் அதிகமாகி, காலில் பெரிய பல ஆறாத புண்ணுகளுடன், நினைவு தடுமாறி நம் ஊருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து கவனித்து வந்தார்.
ஒரு நாள் அதிகாலை அந்த பெரியவர் சற்று முனங்கிக்கொண்டு இருந்ததால், விளக்கை போட்டு, அவரை ஆசுவாசப்படுத்தி, சற்று குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு,விலகி இருந்த போர்வையை சரி செய்த போது, கால் புண்ணிலும், படுக்கை ஓரங்களிலும் எறும்புக் கூட்டம் அவரை பதம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளது. உடனே நர்சை கூப்பிட்டு சரி செய்ய வைத்தாராம்.
இதை என்னிடம் கூறி எப்படி மருத்துவமனை நடத்துகிறார்கள் என்று பாருங்க என்று வருத்தத்துடன் கூறினார்.
நானோ, எப்படி இதை விட்டீர்கள்..? அவர்களை ஒரு பிடி பிடித்து இருக்கலாம் அல்லவா..?
அவரோ,, என்னத்தை செய்ய..? டாக்டரிடம் கூறினேன். அவரோ ஒன்றும் சீரியஸ் ஆக எடுக்காமல்.. பார்த்துக்கொள்ளுகிறோம்.., பார்த்துக்கொள்ளுகிறோம் என்று கூறிவிட்டாராம்.
காட்சி -2
இந்த சகோதரர் ஒரு நாள் நம்முடைய KMT மருத்துவமனையில் காட்டு கத்து கத்தி, சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்.
நான் அருகில் சென்று ..என்ன காக்கா.. என்ன பிரச்சனை, சப்தத்தை குறைங்க. நம்ம மருத்துவமனை இது.
அவரோ, என்ன ஆஸ்பத்திரி நடத்துறானுவோ..? ஆஸ்பத்திரியாம் ஆஸ்பத்திரி என்று கூவினார்.. சவுண்டை குறைக்காமால்.
விசாரித்தால்.... மருத்துவர் மாத்திரை 1000 Mg. எழுதி கொடுக்க, மருத்துவமனையில் 1000 Mg இல்லாததால் 500 Mg யாக, டபுள் மாத்திரை கொடுத்துள்ளார்கள். இரண்டு நாட்களாக அந்த 500 Mg மாத்திரையை இரண்டு இரண்டாக கொடுக்காமல், ஒன்று ஒன்றாக கொடுத்தார்களாம். அதனால் அவங்க கூட்டி வந்த பையனுக்கு நோய் குணமாக லேட் ஆகி விட்டதாம். இது தான் அவரை மிகவும் டென்ஷன் ஆக ஆக்கியதாம்.
அவரை சமாதானப் படுத்தி..
காக்கா, இதுவும் தவறு தான். மாத்திரையை கொடுக்கும் சமயம் அவர்கள் கூறி இருப்பார்கள், நீங்கள் கேட்க தவறி இருப்பீர்கள். அல்லது அவர்கள் கூற மறந்து இருப்பார்கள். மருந்து கொடுக்கும் செவிலியர் எத்தனை Mg என்று பார்க்க தவறி இருப்பார்கள்.
அதற்கு இப்படியா சண்டை போடுவது. இந்த சண்டையை அன்று கூறினீர்களே, அந்த எறும்பு சம்பவத்தில் அந்த மருத்துவமனையில் நடைபெற்றதே..!! அங்கு போட்டு இருந்தால் அது நியாயம்.
இந்த மாத்திரை விசயத்தை நிர்வாகத்திடம் ஒரு புகாராக தெரிவித்தாலே போதும். என்று விளக்கம் கொடுத்து அனுப்பிவைத்தேன்.
ஏன் இப்படி…?? KMT என்றால் ஒரு இளக்காரமா..? ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் சண்டை போட்டுக்கொண்டேதான் இருக்கின்றார்கள்.
மற்ற மருத்துவமனைக்கு காலையில் சென்றால் மாலை வரை காத்து இருந்தாலும் வராத கோபம், நம் KMT யில் ஒரு அரைமணி நேரம் அதிகம் காத்து இருந்தால் வருவது ஏன்..? நம்முடைய மருத்துவமனை என்பதாலா?
மற்ற ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று, அங்கு மருத்துவர் இல்லை என்று சொன்னாலோ, டெஸ்ட் ரிப்போர்ட் நாளைக்குத்தான் வரும் என்று கூறினாலோ ஒன்றும் அதிகம் பேசாமல் சிரித்துவிட்டு அப்படியா என்று தலையை ஆட்டிவிட்டு வரும் நாம்,
KMT யில் மருத்துவர் வர இன்னும் அரைமணி நேரம் ஆகும், வெயிட் பன்னுங்க என்று கூறினாலோ, டெஸ்ட் ரிப்போர்ட் இன்னும் 10 நிமிடத்தில் ரெடி ஆகிவிடும், கொஞ்சம் உட்காருங்க என்று கூறிய அடுத்த நொடியில், ஆட்டோ பிடித்து அவ்வளவு தொலைவில் இருந்து வருகிறோம், வீட்டில் பசங்க தனியாக இருக்காங்க என்று பல காரணங்கள் கூறி பொங்கிக்கொண்டு வரும் கோபம் எதனால்...? புரியவில்லை.
இந்த கோபங்களை மற்ற மருத்துவமனையில் ஏன் காட்டுவது இல்லை..?
தவறுகள் இல்லாத இடங்களே இல்லை. அதை எதிர்கொள்ளும் அளவுகோல் ஏன் வித்தியாசம் என்பதுதான் என்னுடைய ஆதங்கம்..??
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross