சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நகர்நல வருடாந்திர திட்டங்களுள் ஒன்றான - ஏழை எளியோருக்கு பயன்படுத்திய நல்லாடை வினியோகத் திட்டம், 30.09.2015 புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்களால் - தாமாக முன்வந்து செய்யப்படும் உதவித் திட்டமான பயன்படுத்திய நல்லாடை வினியோகத் திட்டத்தின் கீழ், நடப்பு வினியோகத்திற்கான நல்லுடைகளை – சிங்கப்பூரில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் உறுப்பினர்கள் குறித்த காலத்தில் சேர்ப்பித்தனர். அவை புத்தாடைகள் போல பெட்டிகளில் அடைக்கப்பட்டு, வெவ்வேறு கப்பல்கள் மூலம் காயல்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெறப்பட்ட உடைகள் காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் - காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் அலுவலகத்தில் முறையாகப் பிரித்து அடுக்கப்பட்டு, ஏழை-எளியோருக்கு வினியோகிக்கப்பட்டது.
உடைகளை வகைப்படுத்தி வினியோகிக்கும் பணியை, பொதுநல ஊழியர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, சிங்கப்பூர் காயல் நல மன்ற பிரதிநிதி கே.எம்.டீ.சுலைமான் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
சிங்கை காயல் நல மன்றத்தின் - பயன்படுத்திய நல்லாடைகள் வினியோகம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |