செய்தி: கடற்கரை பயன்பாடு குறித்த அனைத்து செயல்திட்டங்களுக்கும் முழு ஒத்துழைப்பளிப்போம்! கலந்தாலோசனையில் நகர்மன்ற உறுப்பினர்கள் உறுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எங்களைப் பார்த்தல் பாவமாக தெரியவில்லையா.... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[02 May 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4202
பாராட்டுக்கள்.
இப்படி ஊரின் நன்மைக்காக அனைவர்களும் ஒன்றுகூடி இருப்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒற்றுமை அனைத்து பிரச்சனைகளுக்கும், ஊரின் நன்மைக்கும் நீடித்து இருக்க வல்லோனை இறைஞ்சுகிறேன்.
அப்புறம், கஞ்சி, வடை போடுபவர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுங்க. கடற்கரை பூராவும் அடுப்புக்கரி மயம்தான். புதிய வேஷ்டி உடுத்துக் கொண்டு கடற்கரை செல்ல முடிகிறதா!! 245 ரூபாய் புதிய வேஷ்டி பால்தான்.
கடற்கரைக்கு சென்றால், முதலில் குப்பை இல்லாத இடமாக பார்த்து, பின்பு கைகளாலும், கால்களாலும் மண்ணைக்கிளறி அடுப்புக்கரிகளை அப்புறப்படுத்தி, பின்புதான் அமரமுடிகிறது. உடனே மண்ணைக்கிளறும் போது மூன்று, நான்கு பேர் வந்து
"காக்கா என்ன.. என்ன .. எவ்வளவு?"
நான் உடனே "245 ரூபாய்"
அவ்வளவு ரூபாயா...
ஆமாம்ப்பா.. வேஷ்டி விலை எல்லாம் கூடிவிட்டது...
என்ன காக்கா.. ஜோக் அடிக்கின்றீர்கள்.. மண்ணை கிளறிக்கொண்டு இருக்கிறீர்களே.. எதுவும் தொலைத்துவிட்டீர்களா என்று.......
அதற்கும் அதிகமாக... வீட்டில்..
"என் சொல்லை எங்கு கேட்கிறீங்க.. கடற்கரைக்கு போகும்போது பழைய வேஷ்டி உடுத்துட்டு போங்க, பழைய வேஷ்டி உடுத்துட்டு போங்க எத்தனை தடவை சொல்லுறேன்...” இப்படி பாட்டு வேறு கிடைகிறது..
பழைய வேஷ்டி உடுத்து வந்தால், உடனே நம்ம ஆட்கள் "என்ன வேஷ்டி பழுத்து விட்டதே, எப்போ பயணம் புறப்படுகிறீர்கள்" என்று. நாங்கள் வருவதே ஒரு மாத விடுமுறையில்.
பார்த்து செய்யுங்க... எங்களைப் பார்த்தல் பாவமாக தெரியவில்லையா....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross